Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஷ்டம சனி முடியும் மாதம்.. இப்டி தான் இருக்கும்.. | January Month Rasi Palan 2023 Midhunam

Nandhinipriya Ganeshan Updated:
அஷ்டம சனி முடியும் மாதம்.. இப்டி தான் இருக்கும்.. | January Month Rasi Palan 2023 Midhunam Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

புதன் பகவானை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசிக்காரர்களே! கடந்த இரண்டரை வருடம் அஷ்டமத்து சனியால் படாது பாடு பட்டிருப்பீர்கள். அந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற போகிறீர்கள். ராசிநாதன் புதன் உங்க ராசியினை சூரியனுடன் சேர்ந்து பார்ப்பதால், இந்த மாதம் அற்புதமான பலன்களை கொடுக்கும். மாணவர்களுக்கு அற்புதமான காலம். 

அஷ்டம சனி முடியும் மாதம்.. இப்டி தான் இருக்கும்.. | January Month Rasi Palan 2023 Midhunam Representative Image

ஜனவரி 17 ஆம் தேதி சனிபகவான் உங்க ராசியின் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு வருவதால், தொழிலில் இருந்த தடை அனைத்தும் விலகும். பொருளாதரத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இருப்பினும், அனைத்து விஷயங்களிலும் நிதானமாகவும், பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் ஈடுபட வேண்டும். மேலும், இந்த மாதத்தில் நீங்க எதிர்பார்த்த இடத்தில் இருந்து தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். 

கடன் பிரச்சனை அனைத்திற்கு ஆரம்ப புள்ளியாக அமையப் போகிறது இந்த ஜனவரி மாதம். மாதத்தின் நடுப்பகுதியில் சூரியனின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால், வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சகோதர, சகோதரி உறவில் இருந்துவந்த மனகஷ்டங்கள் விலகும். உறவினர்களால் அனுகூலப் பலன்களை அனுபவிப்பீர்கள். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் பணியிட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெண்களை பொறுத்துவரை எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து கவனமாக செய்வது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 6

சந்திராஷ்டம நாள்: 22, 23

பரிகாரம்: தினசரி பெருமாள் வழிபாடு செய்வது அனுகூலமான பலன்களை பெற்று தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்