Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 13 ஆம் நாள் புதன்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - குழப்பம்

ரிஷபம் - நிதானம்

மிதுனம் - ஆதாயம்

கடகம் - நலம்

சிம்மம் - உத்வேகம்

கன்னி - பாராட்டு

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் | Mesham Nalaya Rasi Palan

அதிக சிந்தனை உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும். பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் | Rishabam Nalaya Rasi Palan

அனுகூலப் பலன்களை அனுபவிக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். அனாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் | Mithunam Nalaya Rasi Palan 

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் | Kadagam Nalaya Rasi Palan

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடத்து கொள்ளவும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் | Simmam Nalaya Rasi Palan

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். உத்வேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும்.. 28.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி | Kanni Nalaya Rasi Palan

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [28.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்