Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுயரூபம் எடுக்கும் மேஷ ராசிக்காரர்கள்! தரமான சம்பவம் காத்திருக்கு! | Tamil New Year Rasi Palan 2023 Mesham

Gowthami Subramani Updated:
10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுயரூபம் எடுக்கும் மேஷ ராசிக்காரர்கள்! தரமான சம்பவம் காத்திருக்கு! | Tamil New Year Rasi Palan 2023 MeshamRepresentative Image.

அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம். 

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுயரூபம் எடுக்கும் மேஷ ராசிக்காரர்கள்! தரமான சம்பவம் காத்திருக்கு! | Tamil New Year Rasi Palan 2023 MeshamRepresentative Image

மேஷம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023

மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த தமிழ் வருடப் பிறப்பு சிறப்பாக அமைகிறது. இதுநாள் வரை திருமணம் ஆகாத நபர்களுக்கு, வரன் கூடி திருமணம் நடப்பதற்கான யோகம் சிறப்பாக உள்ளது. கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல ஒரு சிறப்பான வாழ்க்கை அமையும். தொழிலைப் பொறுத்த வரை, இந்த ஆண்டு சிறப்பான யோகம் பெற்ற காலமாக அமைகிறது. தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமுமில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், இந்த ஆண்டு அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் நிகழும். தடைகள் அனைத்தும் விலகி, லாபங்களைப் பெறப்போகும் நல்ல ஒரு ஆண்டாக அமைகிறது. 
 

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுயரூபம் எடுக்கும் மேஷ ராசிக்காரர்கள்! தரமான சம்பவம் காத்திருக்கு! | Tamil New Year Rasi Palan 2023 MeshamRepresentative Image

தொழில், நல்ல வேலைவாய்ப்பு, பொருளாதாரம், திருமண வாழ்க்கை என அனைத்தும் மிகச் சிறப்பாக அமையப் போகும் ஆண்டாக இந்த தமிழ்புத்தாண்டு பலன் அமைகிறது. பொருளாதார நெருக்கடிகள், கடன் சுமைகள் அனைத்தும் குறைந்து வீழ்வதுடன், நல்ல மேன்மையை வழங்குவதாக அமைகிறது. முதல் ஐந்து மாதங்கள் இந்த பலன்கள் அனைத்தும் குறைவாக கிடைத்தாலும், ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறப்பாக அமையும். எனவே, பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தைப் பொறுத்த வரை, சிறிது அல்லது மிக அதிகமாகவே கவனத்துடன் இருப்பது சிறப்பைத் தரும். 
 

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுயரூபம் எடுக்கும் மேஷ ராசிக்காரர்கள்! தரமான சம்பவம் காத்திருக்கு! | Tamil New Year Rasi Palan 2023 MeshamRepresentative Image

மாணவர்கள் முதல் ஐந்து மாதங்கள் எத்தனையோ பிரச்சனைகளைக் கடக்கும் சூழ்நிலை ஏற்படலாம். மனத்தடுமாற்றம் ஏற்படலாம். தேவையற்றதைத் தவிர்த்து, நல்வழி செல்வதில் சிறிது கவனமாக இருத்தல் வேண்டும். உடல் நிலை சார்ந்தவற்றில் அதிகளவு கவனத்துடன் செயல்படுவது கூடுதல் பலன்களைத் தரும்.

பரிகாரம்: தினந்தோறும் முருகனை வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு விரதம் இருப்பது சிறப்பு.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்