Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Kumbam : கும்ப ராசிக்கு தடுமாற்றம் எல்லாம் இனி கொண்டாட்டம் தான்...!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Kumbam : கும்ப ராசிக்கு தடுமாற்றம் எல்லாம் இனி கொண்டாட்டம் தான்...!Representative Image.

கும்ப ராசிக்காரரே 2022 மார்கழி மாதத்தில் 2 இல் குரு, 3 இல் இராகு, 4 இல் செவ்வாய் வக்கிரம், 9 இல் கேது,11 இல் சூரியன், சுக்கிரன், புதன் சேர்க்கை, 12 இல் சனி சஞ்சாரம் கொள்கிறது. இதனால் மார்கழிமாதம் என்ன மாதிரியான பலன் ஏற்படும்..? புதிய முயற்சிகள் செய்ய உகந்ததா..?  என்பதை அறியலாம்.  

மார்கழி மாத ராசிபலன் 2022- கும்பம் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Kumbam)

Margazhi Rasi Palan 2022 Kumbam : கும்ப ராசிக்கு தடுமாற்றம் எல்லாம் இனி கொண்டாட்டம் தான்...!Representative Image

கும்பம் 

பொது பலன்:

இந்த மாதம் முன்னேற்ற பாதைக்கு தகுந்த தருணம் ஆகும். தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் கைக்கு வரும் பணம் சேமிக்க முடியாது. குடும்ப வாழ்வில் நிம்மதி எட்டிப்பார்க்கும் நேரம் ஆகும். 

குடும்ப  வாழ்க்கை:

இல்லற வாழ்வில் அமைதி நிலவும். திருமண பேச்சு வார்த்தை நல்ல பலன் அளிக்கும். வீடு, நிலம் போன்ற சுப செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பது குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சி அளிக்கும். 

தொழில்: 

தொழிலில் இவ்வளவு நாட்களாக இருந்த மந்த நிலை சரியாகும். தொழில் மாற்றம் உண்டாகும், தொழிலில் அடுத்த நிலைக்கு செல்லும் முயற்சி வெற்றியாகும். குரு வக்கிரமாக இருப்பது உங்களுக்கு சாதகமாக அமைகிறது.  செவ்வாய் 4 ஆம் வீட்டில் இருப்பது தொழிலில் முயற்சி செய்யும் துணிச்சல் அளிக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பது வருமான இழப்பிற்கு தீர்வு அளிக்கும். வரவும் செலவும் சமமாக அமையும். 

உடல்நலம்:

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, மருத்துவ செலவை உருவாக்கும். வயிறு, நரம்பு சார்ந்த தொல்லை ஏற்படும். வயதான கும்ப ராசியினருக்கு மருத்துவ செலவு வந்தாலும் மனதில் நம்பிக்கை இருக்கும். 

சந்திராஷ்டமம்:

ஜனவரி 12, 13, 14

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்