Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,957.96
616.88sensex(0.80%)
நிஃப்டி23,680.45
142.60sensex(0.61%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - உத்வேகம்

விருச்சிகம் - நம்பிக்கை

தனுசு - செலவு 

மகரம் - நிதானம்

கும்பம் - அனுகூலம்

மீனம் - நன்மை

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [14.12.2022]

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். உத்வேகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியக்ளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை பெற்று தரும். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

இன்று சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். அனைவரிடம் சகஜமான அணுகுமுறை வேண்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பணவரவு வசூலாகும். மனதளவில் ஒரு புதுவிதமான தெளிவும் தெம்பும் உண்டாகும். இருப்பினும், செலவுகள் அதிகரித்து காணப்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: 3

அதிர்ஷ்ட எண்: மஞ்சள் நிறம்

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். நேர்மறை எண்ணம் கொண்டு செயலாற்றுவது நல்லது. தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்துக்கூடிய நாளாகவும் இருக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சேமிப்பு உயரும். உங்க துணையுடன் மறக்க முடியாத நாளாகவும் இருக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 14.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

புதிய முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். உங்க மனதில் புது தைரியம் பிறக்கும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. குடும்பத்தில் அன்பு, அரவணைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்