Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Meenam : மார்கழி மாதம் மீன ராசிக்கு மகிழ்ச்சி தான்...!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Meenam : மார்கழி மாதம் மீன ராசிக்கு மகிழ்ச்சி தான்...!Representative Image.

மீனம் ராசிக்காரருக்கு 2022 மார்கழி மாதத்தில் ராசி அதிபதி குரு ஜென்மத்தில் இருப்பதால் ஏதாவது சாதக பலன் கிடைக்குமா..? என்ற குழப்பமா... உங்களுக்கு தெளிவான பதிலை இந்த பதிவு அளிக்கும். மேலும் 2 இல் இராகு, 3 இல் செவ்வாய் வக்கிரம், 8 இல் கேது, 10 இல் சூரியன், சுக்கிரன், புதன் சேர்க்கை, 11 இல் சனி சஞ்சாரம் கொள்கிறது. 

மார்கழி மாத ராசிபலன் 2022-  மீனம் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Meenam)

Margazhi Rasi Palan 2022 Meenam : மார்கழி மாதம் மீன ராசிக்கு மகிழ்ச்சி தான்...!Representative Image

மீனம்

பொது பலன்:

இந்த மாதம் உங்களுக்கு தொழிலில் நல்ல மாற்றத்தை அளிக்கும், கடந்த காலங்களில் இருந்த கஷ்டம் குறையும். முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் துணிச்சலாக செயல்பட உதவும். 

குடும்ப பலன்:

குடும்ப வாழ்வில் தடைப்பட்ட விஷயங்கள் நல்ல முடிவு பெறும். குழந்தை பாக்கியம் உண்டு. குடும்பத்தினர் உடன் அன்யோன்யம் அதிகமாகும். 

தொழில் பலன்:

தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது தொழிலில்  ஏற்பட்ட கஷ்டங்களை சரிசெய்யும். செவ்வாய் வக்கிரமாக 3 இல் இருப்பது வியாபாரத்தில் தைரியமாக செயல்பட தூண்டும். தொழில் இருந்த மந்த தன்மை நீங்கும். கல்வியில் மந்தநிலை ஏற்படலாம் ஆனால்  புதன் பின் 11 இல் வக்கிரம் கொள்வது கல்வியை மேம்படுத்தும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பது பொருளாதார நிலையில் உயர்வு அளிக்கும். 

உடல்நலம்:

2 இல் இராகு இருப்பதால் சிலருக்கு நரம்பு சார்ந்த சிறு தொல்லைகள் உருவாகும், அதுவும் புதன் வக்கிரம் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  உடல்நலத்தில் அக்கறையை உண்டாக்கும். 

சந்திராஷ்டமம்:

ஜனவரி 14, 15, 16 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்