Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - முயற்சி

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - லாபம்

கடகம் - உற்சாகம்

சிம்மம் - கவனம்

கன்னி - பொறுமை

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

இன்று தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும். உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் எழும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

வெற்றியை அடைய வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

நுட்பமான சிந்தனையின் மூலம் வியாபாரத்தில் லாபத்தை ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இதனால், நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. நிதிநிலைமை தாராளமாகவே உள்ளது. இதனால், சேமிப்பு உயரும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. புதிய முயற்சிகள் சிக்கல் உருவாகும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பணியிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். அனாவசிய செலவை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3
 

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் சுமூகமான பலனை பெறலாம். வரவு செலவு இரண்டும் இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாப மழை தான்.. 14.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [14.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்