Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி எல்லாமே உச்சத்தில் இருக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் தேவை | May Month Rasi Palan 2023 Simmam in Tamil

Priyanka Hochumin Updated:
இனி எல்லாமே உச்சத்தில் இருக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் தேவை | May Month Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இனி எல்லாமே உச்சத்தில் இருக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் தேவை | May Month Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image

கடந்த சில வருடங்களாக சிம்ம ராசிக்காரர்கள் பல இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஆனால் வரும் மே மாதமானது உங்களுக்கு வளர்ச்சிக்கான மாதமாக அமையும். இடமாற்றம் அதாவது வெளிநாடுகளுக்கு செல்லும் சிந்தனை உடையவர்களாக இருந்தால் அதற்கான முயற்சி எடுங்கள். ஏனெனில் மே மாதத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் நீங்கள் நினைத்தது நடக்கும். மேலும் உங்களின் ராசிநாதர் சூரிய பகவான் உச்சத்தில் இருப்பதால் பணவரவு மேம்படும். மற்றவர்கள் மத்தியில் புகழ், அந்தஸ்த்து அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நடக்கும்.

நீண்ட நாட்களாக திருமணம் அமைப்பு இல்லாத சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். குரு பகவானின் பார்வை சிம்ம ராசி மீது படுவதால் உடல் ஆரோக்கியம் செம்மையாக இருக்கும். நீங்கள் செய்யும் பணியில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான அம்சம் உள்ளது. வீடு வாங்கும் வாய்ப்பு ஏற்படும். யோகாதிபதி செவ்வாய் இருப்பதால் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கூட உங்களை வந்து சேரும். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் சிம்ம ராசியினருக்கு குரு பகவானின் பார்வையால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்