Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

தொழிலில் அதிக லாபத்தைப் பெறப்போகும் நீங்க, இதுல ரொம்ப கவனமா இருக்கணும்.! | May Month Rasi Palan 2023 Magaram in Tamil

Gowthami Subramani Updated:
தொழிலில் அதிக லாபத்தைப் பெறப்போகும் நீங்க, இதுல ரொம்ப கவனமா இருக்கணும்.! | May Month Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் மகர ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

தொழிலில் அதிக லாபத்தைப் பெறப்போகும் நீங்க, இதுல ரொம்ப கவனமா இருக்கணும்.! | May Month Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image

உங்கள் ராசிநாதன் 2 ஆம் வீட்டில் இருப்பதால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ராசிக்கு 4 ஆம் அதிபதியான செவ்வாய் பகவான் ராசிக்கு 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும். இருப்பினும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சூரிய பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், அரசாங்க ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒன்பதாம் வீட்டில் உள்ள புதன் பகவான், உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றம், பணி உயர்வு, வேலை மாற்றம் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெகு தூர பயணங்களால் நன்மைகள் நடக்கும்.

தொழிலில் அதிக லாபத்தைப் பெறப்போகும் நீங்க, இதுல ரொம்ப கவனமா இருக்கணும்.! | May Month Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image

பத்தாம் வீட்டில் அமையும் சுக்கிர பகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திப்பது நன்மையைத் தரக்கூடியது. மாதத்தின் பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் மாறினால் கூட தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பான தொழில் அமையும். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். லாபங்கள் கிடைக்கும். இருப்பினும், தாமதமாகலாம். மகர ராசிக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாகவே கூறலாம். ஆனால், மாதத்தின் ஆறு நாள்களில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதாவது மாதத்தின் முற்பகுதியில் 1,2,3 ஆகிய தேதிகளிலும், பிற்பகுதியில் 26, 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் சந்திராஷ்டமம் நிலவுகிறது. இந்த தினங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்