Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாபம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த கஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | May Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Gowthami Subramani Updated:
லாபம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த கஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | May Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

லாபம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த கஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | May Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image

பல்வேறு நன்மைகளைப் பெறக்கூடிய சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான் ராசிக்கு 8 ஆம் வீட்டில் சஞ்சரித்ததால், மனக்கசப்புடன் கூடிய மாதமாக அமைந்திருக்கலாம். பல்வேறு தடங்கல் ஏற்பட்டிருக்கும். பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தோல்வியைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம். இவை அனைத்தையும் மாற்ற 9 ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க உள்ளதால், சிறப்பான மாதமாகவும், முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

லாபம் சிறப்பாக உள்ளது. அதே சமயம் இந்த கஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இருக்கு.. | May Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image

உங்கள் ராசிக்கு 7 ஆம் அதிபதியான சுக்கிர பகவானால், உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். மனைவி மற்றும் நண்பர்களால் பிரச்சனை ஏற்படும். ஆனால், மாதத்திற்கு பிற்பகுதியில், 8 ஆம் வீட்டில் சுக்கிர பகவான் பெயர்ச்சியாவதால் மனைவியுடன் கூட்டுத் தொழில் மனக்கசப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சூரிய பகவான் உச்ச நிலையில் சந்திப்பதால் மிகச் சிறப்பான அமைப்பாக உள்ளது. வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். வருமானம் சிறப்பாக உள்ளது. அதே சமயம், லாபம் பெற நினைப்பவர்களுக்கு சற்று தாமதாகக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். பொருளாதாரம் தொடர்பான உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்