Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேற்றம் தான்..! ஆனா இந்த தினங்களில் உஷாரா இருக்கணும்..! | May Month Rasi Palan 2023 Thulam in Tamil

Gowthami Subramani Updated:
கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேற்றம் தான்..! ஆனா இந்த தினங்களில் உஷாரா இருக்கணும்..! | May Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேற்றம் தான்..! ஆனா இந்த தினங்களில் உஷாரா இருக்கணும்..! | May Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image

மே மாதத்தைப் பொறுத்த வரை, துலாம் ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன்             சொந்த ராசியில் இருக்கிறதால், இந்த மாதம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். மாத இறுதியில் உங்களுக்கான நற்பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றமான சூழ்நிலைகளைத் தரும். மிகச்சிறப்பான அமைப்பாக அமையும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். தொலை தூர பயணங்கள் நன்மை ஏற்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். மனதில் எழக்கூடிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேற்றம் தான்..! ஆனா இந்த தினங்களில் உஷாரா இருக்கணும்..! | May Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்த செவ்வாய் அதிபதி, 10 ஆம் வீட்டிற்கு சென்றதால், சிறப்பான மாதமாக அமைகிறது. இதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. தொழிலில் மேன்மை ஏற்படும். நண்பர்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். பொருளாதார மேம்பாடு சிறப்பாக உள்ளது. தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறும் மாதம். உடல் நலத்தில் சிறப்பாக உள்ளது. 20, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்