Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.... 07.09.2022  ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 06, 2022 & 16:10 [IST]
Nalaya Rasi Palan: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.... 07.09.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 22 ஆம் நாள் புதன்கிழமை (07.09.2022), கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன்கள் பற்றி அறிய வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கு உண்டான பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளன. 

நாளைய ராசிபலன் (08.09.2022)

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் - கன்னி ராசிபலன் (07.09.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். திருமண சுபமுயற்களில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சூழ்நிலையை பொறுமையுடனும் உறுதியுடனும் எதிர்க்கொள்ள வேண்டிய நாள். வீண் செலவுகள் தேடி வரும். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது அதிகப்படியான பணச்செலவுகளை குறைக்கும். 

துணையுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். எனவே, இருவரிடமும் நல்ல புரிந்துணர்வு இருந்தால் பெரிய சண்டையை தவிர்க்கலாம். பதட்டத்தால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, எதையும் எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். 

வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய ஆதரைவை பெற முடியும். முதுகுவலி, தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.  நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

புதிய முயற்சிகள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குழப்பம் ஏற்படும். எனவே, இலக்குகளை திட்டமிட்டு மேற்கொள்வது அனுகூலப் பலன்களை பெற்று தரும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். நிதி நிலைமை இன்று சுமூகமாக இருக்காது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து போவதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்ப்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். தடை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று சாதகமான நாள். சுய முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை அடைவீர்கள். பணியில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பிற்கான பாராட்டும் பரிசும் கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். காதலர்களிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இதனால், கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்பும் பாசமும் அதிகரிக்கும். 

நிதி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் இல்லை, சிறப்பாகவே உள்ளது. ஆக மொத்தம் இன்றைய நாள் அற்புதமாக இருக்கும். அனுகூலம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்து சுபசெய்தி வீடு தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்க அற்புதமான நாள். சமயோசித புத்தி, புத்திசாலித்தனத்தின் மூலம் அனுகூலப் பலன்களை அடைவீர்கள். பணியில் சிறப்பாக பணியாற்றி, மேலதிகாரியின் பாராட்டை பெருவீர்கள்.

குடும்பத்தில் அக்கறை, பாசம், ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு 

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்க விருப்பங்களை அடைவதற்கு இன்று சாதகமான நாள். பணியில் உங்களுடையை புத்திசாலித்தனத்தை பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும். இல்லற வாழ்வில் அமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்பார்க்காத லாபம் கிட்டும். 

பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக உள்ளது, எந்த பிரச்சனையும் இல்லை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்