Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  07.09.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 06, 2022 & 15:50 [IST]
Nalaya Rasi Palan: எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்..  07.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 22 ஆம் நாள் புதன்கிழமை (07.09.2022), கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன்கள் பற்றி அறிய வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு உண்டான பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளன. 

நாளைய ராசிபலன் (08.09.2022)

நல்ல நேரம்

காலை: 09:15 - 10:15 வரை

மாலை: 04:45 - 05:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் அசது சோர்வு உண்டாகும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால், எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.  குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். 

உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைபார்கள். கணவன்-மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். 

பணியிடத்தில் வேலை அதிகமாக இருந்தாலும், உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, கவனம் தேவை. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா 

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். உங்களது விருப்பத்தின் படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

பணவர தாராளமாக இருக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். இல்லற வாழ்வில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அதிகமாக பழக்கம் இல்லாதவர்களிடம் வீண் பேச்சை குறைப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் நிதானத்துடனும், கவனத்துடனும் செல்வது நல்லது. இன்று பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சுமூகமான பேச்சால் பெரிய பிரச்சனையை தவிர்க்கலாம். பணியிடத்தில் வேலை பளு அதிகமாக காணப்படும். பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டால் தவறுகளை தவிர்க்கலாம்.  ஜாக்கிரதை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிடைக்க வாய்ப்புண்டு.  எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். 

குழந்தைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். துணையின் நடத்தை உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நிதிநிலைமை ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். அன்பு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

குடும்ப விவகாரங்கள் நல்ல முறையில் முடிவுக்கு வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இருந்து எதிர்பாரா உதவி கிடைக்கும்.  சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய உழைப்பிற்கேற்ற பரிசு கிடைக்கும் நாள். வேலை தேடும் கன்னி ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே புரிதல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் - மீனம் ராசிபலன் (07.09.2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்