Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan [12.08.2022]: இந்த 4 ராசிக்காரர்களும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. இல்லனா பெரிய சிக்கல் தான்...

Nandhinipriya Ganeshan August 11, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan [12.08.2022]: இந்த 4 ராசிக்காரர்களும் பொறுமையின் சிகரமாக இருக்கனும்.. இல்லனா பெரிய சிக்கல் தான்...Representative Image.

நல்ல நேரம்: 

காலை: 12.15 - 01.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Nalaya Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் [Mesham Tomorrow Rasi Palan]

தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நாள் முழுவதும்  மிகுந்த  குழப்பத்துடன் இருப்பீர்கள். எனவே, எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் மற்றவர்களிடம் ஆலோசித்து ஈடுபடுவது நல்லது. புதிய முயற்சிகளில் இறங்குபவர்களுக்கு சில தடைகள் இருக்கும்; தோல்விகள் இயற்கையில் சகஜம்தான். ஆனால், தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே. உறவினர்களிடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். குழப்பம்!

ரிஷபம் [Rishabam Tomorrow Rasi Palan]

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். இதனால், வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்னைக்கு தொழி சார்ந்த அணுகுமுறைகளை யதார்த்தத்துடன் கையாள்வது நல்லது. தூரத்து உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வரும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஒரு சிலருக்கு வியாபார சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதங்கள் வரலாம். அனுசரித்து போவது நல்லது. நிதானம்!

மிதுனம் [Midhunam Tomorrow Rasi Palan]

தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் வரும். அதனால், சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியது இருக்கும். அதேபோல், ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.  முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிசுமை அதிகரித்து காணப்படும், பொறுமை இழக்கக்கூடாது. திடீர் செலவுகள் வரலாம். ஆக மொத்தம் உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கவனம்!

கடகம் [Kadagam Tomorrow Rasi Palan]

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். இதனால், சற்று கவலையுடன் இருப்பீர்கள். இருப்பினும், நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் பலன் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைக்கு ஆப்பு திட்டம்போடுவார்கள். எனவே, எதைபேசுவதாக இருந்தாலும் கவனத்தோடு பேச வேண்டும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். கவலை!

சிம்மம் [Simmam Tomorrow Rasi Palan]

சிம்ம ராசிக்காரர்களே.. இன்றைய தினம் ஒரு அற்புதமான நாள். அனைத்து முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அதனால், மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். இன்னைக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மனைவியுடனோ அல்லது முக்கியமானவர்களிடமோ பேசும்போது கவனமாக பேச வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி!

கன்னி [Kanni Tomorrow Rasi Palan]

உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். இன்னைக்கு யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஒருவேளை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் பணத்தை எப்போது திருப்பித் தருவார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களை அனுசரித்து போவதன் மூலம் உங்க பணிகளை வெற்றிகரமாக முடிக்கலாம். ஏமாற்றம்! 

துலாம் - மீனம் ராசிபலன்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்