Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 72,623.09
-434.31sensex(-0.59%)
நிஃப்டி22,055.05
-141.90sensex(-0.64%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan [12.08.2022]: விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்.. ஆனா மகர ராசியினருக்கு? 

Nandhinipriya Ganeshan August 11, 2022 & 15:45 [IST]
Tomorrow Rasi Palan [12.08.2022]: விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்.. ஆனா மகர ராசியினருக்கு? Representative Image.

நல்ல நேரம்:

காலை: 12.15 - 01.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

Tomorrow Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை [2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் - கன்னி ராசிபலன்கள்!

துலாம் [Thulam Tomorrow Rasi Palan]

இன்னைக்கு எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுபார்கள். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. ஏனென்றால், இன்றைய நாள் உங்களுக்கு சரியில்லாமல் இருக்கிறது. தேவையற்ற செலவுகள் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் இன்றைய நாள் உங்க பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம். பொறுமை!

விருச்சிகம் [Viruchigam Tomorrow Rasi Palan]

இன்னைக்கு ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இதனால், மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிப்பீர்கள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். எந்த சின்ன வாய்ப்புகளை மிஸ் பண்ணிட வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பணவரவும் அமோகமாக இருக்கும். ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். அதிர்ஷ்டம்!

தனுசு [Dhanushu Tomorrow Rasi Palan]

நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். உங்க வார்த்தைகளில் கவனம் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவு பெருகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். ஜாக்கிரதை!

மகரம் [Magaram Tomorrow Rasi Palan]

இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும். பணத்தை கையாளும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், இழப்பு உங்களுக்கே. குடும்பத்தில் அனுசரித்து சென்றால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். இருப்பினும் நீங்க அனுசரித்து போவது நட்பை வளர்க்கும். மேலும், மேலதிகாரியின் அன்பும் ஆதரவும் கிட்டும். கணவன் - மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்களால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கல்!

கும்பம் [Kumbam Tomorrow Rasi Palan]

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிலாவது முதலீடு செய்வதாக இருந்தால், எல்லா கோணத்திலும் ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். டென்ஷன் ஆகாமல் நிதானத்தோடு செயல்பட முயற்சியுங்கள். துணையுடன் பேசாமல் இருப்பதே உத்தமம். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சிறப்பு!

மீனம் [Meenam Tomorrow Rasi Palan]

வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்க திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். பாராட்டு!

நாளைய ராசிபலன் [12.08.2022, வெள்ளிக்கிழமை]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்