Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று இந்த 3 ராசிக்காரருக்கு எதிர்பார்த்த வாழ்க்கை தான்... கடக ராசிக்கு..? ஆகஸ்ட் 13, ராசிபலன் 2022...!

Manoj Krishnamoorthi August 12, 2022 & 16:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று இந்த 3 ராசிக்காரருக்கு எதிர்பார்த்த  வாழ்க்கை தான்... கடக ராசிக்கு..? ஆகஸ்ட் 13, ராசிபலன் 2022...! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை (13.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் ராசிக்கு அருமையான நாளாக அமையும், தொழிலில் செய்யும் புது முயற்சி நல்ல பலனளிக்கும். மன உறுதியிடன் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் வியாபாரத்தில் நல்ல பலன் உண்டு. நிதி நிலையில் தாராளமான பண வரவு உண்டு. பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்வீர்கள்.

உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், கணவன் மனைவி உறவில் நட்பான பேச்சு வார்த்தை இருக்கும்.  கல்வி நிலையில் ஏற்றம் உண்டு. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் குணமான பேச்சு உங்களை சார்ந்தோரை நம்பிக்கை ஊட்டும், சக பணியாளரின் திறனை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவீர்கள்.  தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, அலுவலகத்தில் பணியைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.  பண வரவு இருக்கும், வரும் பணத்தை சேமிக்க முடியும்.  

குடும்பத்தினரின் ஆலோசனையை பின்பற்றுவது நலன் அளிக்கும், பெற்றோரின் மூலம் ஆதாயம் பிறக்கும்.  காதல் வாழ்க்கையில் ஓரளவு நிம்மதி இருக்கும். நண்பர்களுடன் ஆனந்தமாகப் பொழுதை செலவழிப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலை உடல்நலத்தை மேம்படுத்தும்.  அமைதியான நாள்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  உங்களின் பல நாள் செயலுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும், தொழிலில் வேலைகள் வழக்கம்போல் நடைபெறும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான  பாராட்டு கிடைக்கும். செல்வ நிலையில் பெரியளவு முன்னேற்றம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில்  சில ஊடல்கள் வந்து மறையும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு அறிவீர்கள். காதல் வாழ்க்கையில் பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் வாய்ப்பு உள்ளது. பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

கடுமையான உழைப்பாளியான உங்களுக்கு இன்றைய தினம் வெற்றி பெற மிகவும் போராட வேண்டியதாக இருக்கும். தொழிலில் நிச்சியம் மேன்மை பெறுவீர்கள்.  அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலையில் மிதமான பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவைப்படும், குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படும். காதல் வாழ்வில் முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுங்கள். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை.  மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

திடமான மனநிலைக்கு உருவமான உங்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக அமையும், சக பணியாளரின் ஒத்துழைப்பு தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். நேர்மையான அணுகுமுறை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

வீட்டில் நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க முடியும். உங்கள் இல்லற வாழ்க்கையில் இன்றைய நாள் இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை அமைதியாக இருக்கும், வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  மன நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி காண முடியும். தொழிலில் ஒரு திருப்தி கிடைக்கும்.  அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. தேவையான அளவு பணம் கையில் இருக்கும்.

குடும்ப வாழ்வில் உங்கள் அன்பான வார்த்தையும் நட்பான அணுகுமுறையும் இனிமையான தருணமாக இருக்கும். பெற்றோரின் மனதை ஆனந்தமாக்குவீர்கள். காதல் வாழ்க்கை சுமுகமாக நகரும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமான உடல்நலம் உண்டு.  நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (13.08.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்