Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Avani Matha 2022 Rasi Palan : கடக ராசிக்கு இப்படி மாற்றமா…! ஆனால் கும்பத்தின் நிலையை நினைச்சா…? ஆவணி மாத ராசிபலன் 2022!

Manoj Krishnamoorthi August 16, 2022 & 10:30 [IST]
Avani Matha 2022 Rasi Palan :  கடக ராசிக்கு இப்படி மாற்றமா…! ஆனால் கும்பத்தின் நிலையை நினைச்சா…? ஆவணி மாத ராசிபலன் 2022!Representative Image.

ஆவணி மாதத்தில் நிகழும் கிரக நிலை மாற்றத்தால் பல ராசிகள் நன்மை பெறும் வேளையில் சில ராசிக்காரர்கள் வீண்வம்பு வழக்கில் சிக்கும் நிலை உள்ளது, இது பற்றி அறிய வேண்டுமா.... உங்களுக்கு கீழ்வரும் பதிவு 12 ராசியும் ஆவணி மாதத்தில் அடையும் பலன் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும்.

மேஷம்

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்ப  வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி காணும் மாதமாக இருக்கும்.  நிதி நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்,  இரத்த சொந்தத்தின் மூலம் செல்வ வரவு உண்டு. சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். 

மேலும் படிக்க….

ரிஷபம் 

உங்கள் ராசிக்கு இந்த மாதம் நல்ல பணப் புழக்கம் உண்டு. தொழிலில் இருக்கும் நிலையிலிருந்து முன்னேற்றம் அடையும். திட்டமிட்டபடி வாழ்க்கை நகரும். புதிய வேலை வாய்ப்பு உருவாகும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.  அரசாங்கம் சார்ந்த வேலைகள் சாதகமாகும். நிதி சார்ந்த விஷயத்தில் நன்மையாகும்.

மேலும் படிக்க….

மிதுனம்

உங்கள் ராசியின் அதிபதியான புதன் 4 ஆம் வீட்டில் உச்சம் கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். தொழிலில் புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் செய்வீர்கள். வண்டி வாகனம் அல்லது வீட்டுமனை போன்றவை வாங்கும் வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க….

கடகம்

உங்கள் ராசியில் 2 ஆம் வீட்டில் சூரியனும் புதனும் இருப்பதும் அதே 2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். ராசியின் அதிபதி சந்திரன் கேட்டையில் இருந்து உத்திராடத்தில் பயணிப்பது சாதகமாகும். 8 ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பது குடும்ப வாழ்வை நிம்மதி அளிக்கும்.

மேலும் படிக்க….

சிம்மம்

சிம்ம ராசிக்காரரே ராசியின் அதிபதி  சூரியன் சிம்ம ராசியிலே இருப்பது  நன்மை அளிக்கும். மேலும், சிம்மத்தில் நிலை கொண்ட புதன்  கன்னி ராசியான 6 ஆம் வீட்டில் நிலை மாறுவது தெளிவான சிந்தனை அளிக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். செலவைக் குறைத்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க….

கன்னி 

கன்னி ராசிக்காரரே இந்த மாத தொடக்கத்தில் சிம்மத்தில் இருக்கும் புதன் பின் கன்னி ராசியில் உச்சம் கொள்வது தொழிலில் நல்ல பலன் அளிக்கும். இதுவரை நிதி நெருக்கடி பிரச்சனையில் இருந்த உங்களுக்கு இனி போதுமான பண வரவு இருக்கும்.  அமைதியான இல்லறத்தை அளிக்கும்.

மேலும் படிக்க….

துலாம்

உங்கள் ராசிக்கு மேஷத்தில் இராகு பகவானும் மீனத்தில் குரு வக்கிரம் கொள்வது மற்றும் 8 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது நன்மை ஆகும். கும்பத்தில் வக்கிரம் கொண்டுள்ள சனி பகவான் தொழிலில் சிறப்பான பலனளிப்பார், எதிர்பாராத உதவி கிடைக்கும்.  ஆனால் பணப் பரிவர்த்தனையில் கவனம் காட்ட வேண்டும். 

மேலும் படிக்க….

விருச்சிகம்

இந்த மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிகழும். தொழிலில் புதிய மனிதர்கள் அறிமுகம் ஏற்படும். குடும்ப பிரச்சனை ஓரளவு குறையும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க….

தனுசு

தனுசு ராசிக்காரரே ஆவணி மாதத்தில் ராசியின் அதிபதி குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருப்பதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மாதத்தின் முதல் பாகம் ஓரளவு நல்ல பலன் அளித்தாலும் இரண்டாம் பகுதி சிறப்பான பலன் அளிக்கும். வீட்டில் நல்ல மாற்றங்கள் இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மேலும் படிக்க…. 

மகரம்

ஆவணி மாதத்தின் தொடக்கத்தில் சிம்மத்தில் குடியிருக்கும் புதன் பகவான் தெளிவான சிந்தனை அளிக்கும். ஆனால் மாதத்தின் பிற்பகுதி சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலைச் சுமை அதிகமாகும். தேவையற்ற செலவுகள் இருக்கும். 

முழுவதும் அறிய…

கும்பம்

குருவின் வக்கிரம் மற்றும் சுக்கிரனின் நிலைப்பாடு நல்ல பலன் அளித்தாலும், செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டிய நிலையை உருவாக்கும். குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் மன வருத்தம் ஏற்படும்.  செல்வ நிலையில் இந்த மாதம் விரைய செலவு தான் இருக்கும்.

மேலும் அறிய….

மீனம்

மீன ராசிக்காரரே ஆவணி மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும், தொழிலில் அதிரடியான மாற்றங்கள் நிகழும். திருமணத் தடைகள் நீங்கும். உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்டுவது நல்லது. கையில் பணம் நிற்கும்.

மேலும் அறிய…

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Avani Matha 2022 Rasi Palan | Aavani Matha Rasi Palan 2022 | Aavani Month Rasi Palan 2022 | Aavani Month Rasi Palan 2022 In Tamil | Aavani Month Rasi Palan 2022 | Aavani Month Rasi Palan In Tamil | Tamil Avani Rasi Palan 2022 | ஆவணி மாத ராசிபலன் 2022 | ஆவணி மாத ராசிபலன்

 



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்