Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்கு வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சி... ஆனால் சிம்மத்துக்கு...! 20.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 19, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிக்கு வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சி... ஆனால் சிம்மத்துக்கு...! 20.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் ஆவணி  4 ஆம் நாள் சனிக்கிழமை (20.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

தொழிலில் உங்கள் செயல் நல்ல பலன் கொடுக்கும், முக்கியமாக சக பணியாளர்களுடன் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாணவர்களுக்கு எதிர்பாராத உதவி கிடைக்கும். பண வரவு நிலையாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் அமைதி காக்க வேண்டும். நண்பர்களுடன்  இன்பமாக இருப்பீர்கள், பழைய நண்பர்களை சந்திக்க முடியும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெருமை!  

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

சுகவாசியாக வாழ நினைக்கும் உங்களுக்கு இன்று கிடைக்கும் ஓய்வு சுகமான வாழ்க்கை வாழ வைக்கும், வியாபாரத்தில் பெரியதாக அலைச்சல் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளருடன் நட்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் நிலையாக இருக்கும், தேவையற்ற செலவைக் குறைப்பதால் சேமிக்க முடியும்.

குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் இருக்கும். காதல் வாழ்க்கை இன்பத்தின் உச்சம் அளிக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் கடினமான உழைப்புக்கு இன்று அருமையான பலன் அளிக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, மேலதிகாரியின் மதிப்பை பெறுவீர். 

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது. பெற்றோர் வழியில் ஆதாயம் கிடைக்கும். சகோதர வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். காதல் வாழ்க்கையில் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் தோன்றி மறையும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்:  6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின்  மனம் நிறைவாக இருக்கும், தொழில் ஸ்தானம் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் சுமுகமாக செல்லும், வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும் அசைக்க முடியாத நிலை உருவாகும். செல்வ நிலை திருப்திகரமாக உள்ளது. 

குடும்ப வாழ்வில் வருங்கால தேவைக்காக முக்கிய முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். காதல் வாழ்வில் திருமண பந்தமாக மாற்ற பேச்சு வார்த்தை நடத்தலாம். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை, தலை வலி, கண் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும். நிறைவு!  

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்பமாக பொழுதைக் கழிக்கும் உங்களுக்கு  சாதாரணமாக செய்யும் செயல் நல்ல பலன் அளிக்கும், தொழிலில் உங்கள் கைப்படும் காரியம்வெற்றி கொள்ளும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். வரவை தாண்டிய செலவு உருவாகும், குடும்பத்தினருக்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தவறினால் பெரிய பிரச்சனை உதிக்கும்,  காதல் வாழ்வில் முக்கிய முடிவு எடுக்கும் முன் கலந்துரையாடி அலோசித்டு எடுத்தால் வெற்றி நிச்சியம் ஆகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அறிமுகமில்லாத மனிதரின் மூலம் கிடைக்கும் உதவி நல்ல பலன் அளிக்கும், மேலும் தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சுய தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்பு அமையும். பணப் புழக்கம் செலவுகளை சமாளிக்கும் வண்ணம் இருக்கும். 

இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், மருத்துவ செலவு ஏற்படலாம். நண்பர்களின் சந்தோஷம் அதிகரிக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (20.08.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்