Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் குழப்பமான மனநிலை மற்றவர்களுக்குத் தான் பிரச்சனை.... 24.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 23, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரரின் குழப்பமான மனநிலை மற்றவர்களுக்குத் தான் பிரச்சனை.... 24.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 8 ஆம் நாள் புதன்கிழமை (24.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10;15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் பணியின் அதிக  நேரம் செலவிடும் நிலை உருவாகும், மேலும் பணியிடத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகமாகும். பண வரவு நன்றாக இருக்கும் செலவை கட்டுப்படுத்துவதால் சேமிக்க முடியும்.

கணவன் மனைவி உறவில் வருங்காலம் சார்ந்த முடிவுகள் எடுப்பீர், குடும்பத்திற்காக சில செயல்கள் செய்வீர்கள். காதல் வாழ்க்கை இயல்பாக இருக்கும். உடல்நலத்தில் சளி போன்ற பிரச்சனைகள் வரலாம். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று உங்களின் சுறுசுறுப்பு வழக்கத்தை விட வேகமாக வேலைகளைச் செய்ய உதவும்.  அலுவலகத்தில் வேலைகள் சீக்கிரம் முடியும்,  உடன் வேலை செய்பவர் உதவியைப் பெறுவீர். முக்கியமான அங்கீகாரம் கிடைக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், வருமானம் உயரும்.

இன்று காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும். திருமணம் கைகூடும். மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் வகுத்து வைத்த திட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கும், மற்றவர்களின் நம்பிக்கையை பெற்றுவிடுவீர். தொழிலில் சற்று வேலைச் சுமை அதிகமாகும். நிதி நிலையில் நிதானமாக செலவிட வேண்டும்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு விட்டில் நிம்மதி அளிக்கும். காதல் வாழ்க்கையில் முக்கியமான ஆலோசனை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் திடீர் குறை ஏற்படும், மருத்துவ செலவு ஏற்படும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் கவன குறை விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடம், எனவே கவனமாக இருங்கள். தொழில் வேலைச் சுமை அதிகமாக  இருந்தாலும் ஆர்வத்துடன்  வேலை செய்வீர்கள். கல்வி நிலை நன்றாக உள்ளது. இன்று செலவு அதிகமாகும்.  

 உங்களின் சுற்றியுள்ளவர்களை இன்பமாக வைத்திருப்பீர்கள். 

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனால் வீட்டில் அமைதி கெடும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். நலம்! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள்  கோபம் இன்று வருமானத்தைக் குறைக்கும். வெகுதூர பயணம் செய்வீர், பயணத்தில் ஒருவித புத்துணர்ச்சி தரக்கூடிய நபரின் அறிமுகம் கிடைக்கும். பணியில் மும்முரமாக நடக்கும். வழக்கமான வேலைகள் சிறப்பாக நடக்கும். சக பணியாளருக்கு உங்கள் மீது நம்பிக்கை வளரும். 

குடும்பத்தில் உங்களின் குழப்பமான மனநிலை மற்றவர்களை ஆச்சரியமாக்கும், காதல் வாழ்வில் பொறுமை மிகமிக அவசியம். மனதை அமைதிப்படுத்த தியானம் போன்ற விஷயத்தைக் கையில் எடுக்க தோன்றும். உடல் அலைச்சல் இருக்கும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பொறுமையாக இருந்தால் பல ஆதாயம் கிடைக்கும். தொழிலில் சிலரின் சந்திப்பு அனுகூலமாக இருக்கும். பயணத்தின்போது  உங்களின் அமைதி கெடும் சூழல் உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளருடன் நட்பு அதிகரிக்கும், சந்தோஷமாக இருப்பீர். செல்வ நிலை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் பெற்றோருடன் அதிக நேரம் ஒதுக்க முடியும். இல்லற வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை சந்தோஷம் அளிக்கும். காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். சரியான  ஓய்வு கிடைக்காததால்  சோர்வாக இருப்பீர்கள், உடல்நலத்தில் கவனமாக இருங்கள்.  அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (24.08.2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்