Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தால் நன்மை.... 27.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 26, 2022 & 11:50 [IST]
Nalaya Rasi Palan: வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தால் நன்மை.... 27.08.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 11 ஆம் நாள் சனிக்கிழமை (27.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் தொழில் ஸ்தானத்தில் உங்கள் இனிமையான பேச்சு இன்று நன்மை அளிக்கும், வியாபாரம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், அவ்வப்போது குடும்பத்தில் சண்டைகள் உருவாகும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் இன்று சிறிய தொல்லைகள் இருக்கும், ஓய்வு தேவைப்படும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் பல நன்மைகள் நிறைந்த நாளாகும், எதிர்பாராத பண வரவு உண்டு. தொழிலில் நல்ல லாபம் பார்க்க முடியும். கல்வியில் பல புதிய நுட்பத்தை அறிந்து கொள்ளுவீர்கள். நல்ல அனுபவம் கிடைக்கும்.

காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும், அமைதியாக இருப்பது நல்லது. வீட்டில் பல குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் கிடைக்கும். நண்பர்கள் செயல் உங்களுக்கு நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சியில் ஏற்படும் சிறிய சருக்கல் உங்களுக்கு ஒருவித அச்சத்தை அளிக்கும், குழப்பமான நிலையில் சில அவசரவ் முடிவெடுக்கும் நிலை உருவாகும். அலுவலகத்தில் சக பணியாளரின் ஒத்துழைப்பு ஒரளவு நன்மை அளிக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு மன நிம்மதி அளிக்கும். காதல் வாழ்வில் நம்ப முடியாத மாற்றம் மனதில் கலக்கம் அளிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக மாறும், மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பண வரவு இருக்கும், செல்வ நிலை நிதி நெருக்கடியை சமாளிக்கும் வண்ணம் இருக்கும். தொழிலில் இன்று கவனமாக இருக்க வேண்டும், சில தவறுகள் ஏற்படும் அதை சரி செய்ய அதிக நேரம் செலவாகும். 

குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்,  முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் உருவாகும், கலந்துரையாடி முடிவெடுப்பது நல்லதாகும். காதல் வாழ்க்கையில் அமைதி காக்க வேண்டும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான சிந்தனையில் இன்று சற்று தடுமாறும் நிலை உருவாகும். தொழிலில் பிரச்சனை ஏதுமில்லை, இயல்பாக நகரும்.  உங்கள் வழக்கமான செயல்களில் பாதிப்பு ஏற்படாது, நிதி நிலை கவனமாகக் கையாள வேண்டும்.  

காதல் வாழ்க்கையில் சில வேறுபாடு உருவாகி மற்றவர்களின் அறிவுரை இன்பமான சூழலை உருவாக்கும். வாழ்க்கைத் துணையின் உதவி தேவைப்படும். ஆரோக்கியம் பிரச்சனை இல்லை, உடல் சோர்வாக இருக்கும். அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தேவையில்லாத வாக்குவாதத்தில் தலையிட வேண்டாம் உங்கள் பேச்சால் சச்சரவு உருவாகும் அதனால் வெளியே செல்லும்போது அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். தொழிலில் எந்த பாதிப்பும் இல்லை, வழக்கம் போல நிகழும். செல்வ நிலையில் கவனம் தேவை. 

குடும்பத்தில் அமைதியாக இருப்பது நிம்மதியைக் கெடுக்காது. காதல் வாழ்க்கையும் சுமாராகத் தான் உள்ளது.  சிறுசிறு உடல் உபாயங்கள் இருக்கும், பெரியதாகப் பாதிக்காது. சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (27.08.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்