Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை [05 ஜனவரி 2023] நாளுக்கான துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்! 

ராசிபலன்: 

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - சுபம்

மகரம் - செலவு

கும்பம் - அனுகூலம்

மீனம் - சிக்கல்

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: -

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [05.01.2023]

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

சாதகமான நாள். கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் புதிய யுக்தியை கையாண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு பரிசுக்கூட கிடைக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் உருவாகும். நாள் சற்று ஏற்ற இறக்கத்தோடு காணப்படும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலனை பெறலாம். உத்யோகத்தில் சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். ஆன்மீக வழிபாடு மேற்கொள்வது அனுகூலப் பலன்களை பெற்று தரும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். அனைவரிடம் சகஜமான அணுகுமுறை வேண்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பணவரவு வசூலாகும். மனதளவில் ஒரு புதுவிதமான தெளிவும் தெம்பும் உண்டாகும். இருப்பினும், செலவுகள் அதிகரித்து காணப்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

சிறப்பான நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். எந்த செயலையும் உறுதியுடன் செயலாற்றுவீர்கள். அனைவரிடமும் நட்பாக பழகுவீர்கள். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். துணையிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு நீண்ட ஆசைப்பட்ட பொருள் வாங்கக்கூட யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரிடம் அனாவசிய தவிர்ப்பது நல்லது. அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan | எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. 05.01.2023 ராசிபலன்!Representative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்ட வேண்டும். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். பணவிஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். செலவுகள் தேடி வரும். ஆக மொத்தம் பிரச்சனை மிகுந்த நாள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்