Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தும் அந்த ராசிக்காரர் நீங்களா….. ஜூலை 27, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தும் அந்த ராசிக்காரர் நீங்களா….. ஜூலை 27, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் புதன்கிழமை (27.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய ராசிபலன் (28.07.2022, வியாழக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (27.07.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் நிதானமான மனது இன்று சஞ்சலம் கொள்ளும், தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன் காண முடியும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சீரான நிதி நிலை இருண்டும் செலவு மன வருத்தம் அளிக்கும். 

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், குடும்பத்தில் மூத்த மனிதர்களின் மனதைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் உண்டு. காதல் வாழ்வில் சண்டைகள் கவலை அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். கவலை! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

விருச்சிக ராசிக்காரரே இன்று எந்தவொரு புதிய முடிவுகளும் எடுக்க வேண்டாம், இன்றைய தினம் நீங்கள் அமைதி காப்பது பிரச்சனையை உருவாக்காது. தொழில் ஸ்தானத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிய தவறும் இலக்கை முடிக்கவிடாமல் தடையாக அமையும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

திருமண வாழ்க்கை சொல்லும்படி நன்றாக இல்லை, வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் இன்றைய தினம் போராட்டமாக அமையும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் ராசிக்கு அயராது உழைக்க வேண்டிய நிலை இருக்கும், வியாபாரத்தில் லாபம் பார்க்க கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் தொழில் ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. நிதி நிலையில் கையிருப்பு தான் செலவாகும்.

குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு உருவாகும், கணவன் மனைவி உறவில் மோதல் உருவாகும். காதல் வாழ்வில் ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் வாழ்க்கையில் இன்றைய தினம் முக்கியமான நாளாக அமையும், உங்கள்  வாழ்க்கையின் முன்னேற்றமாக அமைய வகையில் ஒரு அனுபவமுள்ள மனிதரின் ஆலோசனை கிடைக்கும். தொழிலில் பல மாற்றங்கள் நிகழும். சுய தொழிலில் இது ஒரு நல்ல காலமாக அமையும். நிதி வளர்ச்சி சிறப்பாக அமையும்.

இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், காதல் வாழ்க்கை சுமுகமாக செல்லும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் ஆனந்த கடலில் ததும்பும் அளவு மகிழ்ச்சியான நாளாக அமையும், தொழிலில் கடுமையாக உழைப்பீர்கள் வேலைச் சுமை கூடும். வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். பணம் போதுமான அளவு கையில் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். புதிய மனிதரின் சந்திப்பு மனதில் சந்தோஷம் அளிக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் சாதரணமாக பேசும் வார்த்தைகள் பிறரின் மனதில் மிகப்பெரிய  காயத்தை உருவாக்கும். அலுவலகத்தில் தவறுகள் நடக்க நேரிடும், குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போகும். சரியான திட்டமிடல் இன்று அவசியமாகும்.

குடும்ப வாழ்க்கையில் அமைதி காக்க வேண்டும், உங்கள் வாழ்க்கை துணையுடன் மோதல் ஏற்படும். காதல் வாழ்வில் விரிசல் ஏற்படும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்