Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு வார்த்தையில் கவனம் தேவை.. இல்லைன்னா அனத்தம் உங்களுக்கு தான்.. ஜூலை 28.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 15:45 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு வார்த்தையில் கவனம் தேவை.. இல்லைன்னா அனத்தம் உங்களுக்கு தான்.. ஜூலை 28.2022 ராசிபலன்!Representative Image.

நல்ல நேரம்:

காலை: 10.45 – 11.45 வரை

மாலை: இல்லை

Nalaya Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 12 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் உருவாகும். நாள் சற்று ஏற்ற இறக்கத்தோடு காணப்படும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல பலனை பெறலாம். உத்யோகத்தில் சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். அனுகூலம்!

ரிஷபம்

இன்னைக்கு ஏதாவது முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் பெற்றோரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். இருப்பினும், தனவரவு அற்புதமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், அதனால் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும், அதை எக்காரணத்திற்காகவும் தவறவிட்டுறாதீங்க. ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்குவதற்கான யோகம் கிட்டும். லாபம்!

மிதுனம்

இன்னைக்கு நீங்க எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை கொடுக்கும். எனவே, கவலையின்றி அடியெடுத்து வைக்கலாம், வெற்றி உங்களுக்கே.  வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால், கடன் பிரச்சனை கொஞ்சம் குறையும். எப்போதும் ஆஃபிஸில் எரிந்து விழுந்துக்கொண்டிருந்த நீங்க இன்னைக்கு புன்னகையோடு நடந்து கொள்வீர்கள். அதைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யப்படுவார்கள். மகிழ்ச்சி!

கடகம்

எப்போதும் அதிர்ஷ்டத்தையே நம்பாமல் தன்னம்பிக்கையை நம்பினால் வெற்றி அடைய முடியும். உடன் வேலை செய்பவர்களே உங்களுக்கு வேட்டு வைத்திடுவார்கள். அவர்களிடம் எதையும் யோசித்து பேசுவது நல்லது. தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு இத்தனை நாள் இருந்த வந்த போட்டி பொறாமைகள் குறையும். வேலைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கவனம்!

சிம்மம்

குடும்ப பொறுப்பு கூடுவதால் இன்னைக்கு மனதில் தேவையற்ற கவலை உண்டாகும்.  பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். மற்றவர்களுக்கு எதிர்பாராமல் செய்த உதவிக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இனிமையான அத்தியாயம் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். பரிசு!

கன்னி

இன்னைக்கு எவ்வளவு கஷ்டமான காரியத்தையும் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்க விருப்பத்தின் படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். உடன்பிறந்தவர்கள் நீங்க நினைத்தை விட அதிகமாக உதவுவார்கள். சுபசெய்திகள் காத்திருக்கிறது. எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு மு ன்பும் தீவிரமாக யோசிப்பது நல்லது. மனஉறுதி!

துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியினருடைய தினசரி ராசிபலன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்