Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பொறுமை இழந்து பிரச்சனையைத் தேடி கொள்ளும் ராசிக்காரர் இவரா…. ஜூலை 30, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 29, 2022 & 13:45 [IST]
Nalaya Rasi Palan: பொறுமை இழந்து  பிரச்சனையைத் தேடி கொள்ளும் ராசிக்காரர் இவரா…. ஜூலை 30, 2022 ராசிபலன்..!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் சனிக்கிழமை (30.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் சில முடிவற்ற விஷயத்தின் முடிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கும், மன உளைச்சல் உருவாகும். அலுவலக பணிகளை முடிக்கக் கடினமாக இருக்கும். தொழிலில் இன்று மந்தமான நிலை தான் நிலவி இருக்கும். உங்கள் நிதி நிலையில் செலவுகள் அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக நகரும், குடும்பத்தினரின் ஆறுதல் மிகவும் உதவிக்கரமாக அமையும். கணவன் மனைவி உறவில் சிறிய பிரச்சனைகள் வந்து மறையும். உடல்நலத்தில் சிறிய கவனம் வேண்டும், உடல் சோர்வாக இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும், லாபகரமான நாளாக மாறும். பணிகளில் இருக்கும் கடினமான சூழல் சுமையாகக் காட்சி அளிக்காது ஆர்வத்துடன் உழைப்பீர்கள். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், சேமிக்க முயலுவது நன்மை அளிக்கும். 

இல்லற வாழ்க்கை ஆனந்தமாக இன்பமாக இருக்கும். மேலும் உங்கள் நகைச்சுவையான பேச்சு குடும்பத்தில் மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் சிறிய பதட்டத்தை அளிக்கும், குடும்பஸ்தர்களுக்குப் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாக இருக்கும்.  நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது, பெரியளவு செலவுகள் வராது.

குடும்ப வாழ்க்கை அமைதியாக நகரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும், குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் பிரச்சனை வரும். குடும்ப செலவுகள் இருக்கும் ஆனால் பெரியளவு இருக்காது, குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட சிறிய தொல்லைகள் இருக்கும். அச்சம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று உங்கள் மனதுக்கு ஆனந்தமாக்கும் வகையில் நன்மைகள் நடக்கும், மேலும் உங்களின் தொழிலில் நல்ல லாபம் பார்க்க முடியும். சக பணியாளரின் உதவியால் பணியில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வியாபாரத்தில் இன்று கிடைக்கும் வாய்ப்பு நல்ல மாற்றமாக அமையும். 

வீட்டில் நிம்மதியாக உணருவீர்கள், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நெருக்கத்தை அதிகப்படுத்தும். காதல் வாழ்வில் ஆனந்தம் அதிகமாகும்,  திருமணம் பந்தம் உருவாகும் வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் நீங்கள் அதிகமாகப் போராடும் தினமாக அமையும். தொழிலில் ஒரு நிலையைப் பெறுவதற்கு மிகவும் உழைக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடையப் பல எதிர்ப்புகளைக் கடக்க வேண்டி இருக்கும்.  நிதி நிலையில் பெரியளவு முன்னேற்றம் இருக்காது, செலவுகளைக் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டிய நாளாகும்.

குடும்பத்தில், பொறுமை இழப்பதால் பல பிரச்சனைகளை உருவாக்கி விடுவீர்கள். மேலும் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துப் போகாத நிலை விரிசலை உருவாக்கும். சுற்றத்தாரின் ஆலோசனை கிடைக்கும். காதல் வாழ்வில் பொறுமை மிகவும் அவசியமாகும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. எதிர்ப்பு!   

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள்  கிடைக்கும்  வாய்ப்பு உங்கள் வாழ்வியலை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்,  தொழில் ஸ்தானத்தில் பல மாற்றங்கள் நிகழும் நடக்கும் விஷயங்கள் இன்று வளர்ச்சி அளிக்கும். நிதிநிலையில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். குடும்பத்துடன் இன்ப பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 4

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (30.07.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்