Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசப்பது நல்லது.. 10.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 09, 2022 & 16:15 [IST]
இந்த ராசியினர் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசப்பது நல்லது.. 10.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 25 ஆம் நாள் சனிக்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நாளைய ராசிபலன் (11.09.2022) 

நல்ல நேரம்

காலை: 07:45  - 08:45 வரை

மாலை: 04:30 - 05:00  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய நாள் இல்லத்தில் தாராளமான தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும்.  புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும், உங்க விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் சாதகமான நாள். எந்த செயல்களையும் தன்னம்பிக்கையுடனும் தையரித்துடனும் ஆற்றுவீர்கள்.  

உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் இதுவரை இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், குழப்பங்கள் தீரூம். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். நினைத்த காரியங்கள் நினைவேறும். முக்கிய முடிவுகள் எடுக்க அருமையான நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே நல்ல புரிதல், அன்பு உண்டாகும்.

பண வரவிற்கான அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும். சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

வரவு ஒரு மடங்கு என்றால் செலவு இருமடங்காக இருக்கும். உடன்பிறந்தவர்களிடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் எழலாம். உங்க துணையுடன் தேவையற்ற பேச்சை குறைப்பது உத்தமம். இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசப்பது நல்லது.

வேலைபளு அதிகரித்துக் காணப்படும்.  பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது அனுகூலமான பலன்களை கொடுக்கும். நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

வெற்றியடைய வேண்டுமென்றால் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது அவசியம். உறுதியாகவும் தைரியமாகவும் இருந்தால் பல போராட்டங்களை சமாளிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனை எழலாம். அனுசரித்து போவது நல்லது. 

எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். சேமிப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

பணவரவு அமோகமாக உள்ளது. வியாபார ரீதியாக இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். திடீர் பயணம் உண்டாகும். பிள்ளைகளால் பாராட்டும் புகழும் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். உங்க இலக்குகளை அடைய சற்று கடின உழைப்பு தேவை.

வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். இல்லற வாழ்வில் பாசம், அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். உழைப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் மேன்மை தரும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். கடின உழைப்பிற்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அனுசரித்து போவதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்துக் கொள்வது நல்லது.  நிதி நிலைமை சுமாராக இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் - மீனம் (10.09.2022 ராசிபலன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்