Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பண விஷயத்துல கவனமா இல்லைனா… கண்டிப்பா இது நடந்தே தீரும்… 10.9.2022 ராசிபலன்!

Gowthami Subramani September 09, 2022 & 16:30 [IST]
Nalaya Rasi Palan: பண விஷயத்துல கவனமா இல்லைனா… கண்டிப்பா இது நடந்தே தீரும்… 10.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

நிகழும் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 25 ஆம் நாளான சனிக்கிழமை (10.09.2022) தினத்தின், 12 ராசிகள் அடையக் கூடிய பலன்களைப் பற்றிக் காண்போம். இந்தப் பதிவில் துலாம் முதல் மீனம் ராசி வரையிலான 6 ராசிகளின் பலன், இன்றைய தினத்திற்கான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் உள்ளிட்டவற்றைப் பற்றி காணலாம்.

நாளைய ராசிபலன் (11.09.2022)

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 வரை

மாலை: 04.30 முதல் 05.00 வரை

மேஷம் - கன்னி (10.09.2022 ராசிபலன்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு எல்லா விகிதத்திலுமே அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப் போகிறீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வளர்ச்சி கிடைப்பதுடன் சிறப்பான நாளாக அமைகிறது. வேலையிடத்தில் உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் தரமான பணிகளை வழங்குவதுடன் செயல்திறன் பாராட்டத்தக்கவையாக அமையும்.

https://lh3.googleusercontent.com/AxZQWWB-QuE0oZndngwm5H6jyovhSmN66pchqvUWfeGBJt9F53aJYRJSFfYUd8RNtFpOdU796p1BiQyczsib6LcLHRtb-K_bd1kwMRqiWU0UPcjaaZTdmKoSbtXd5OUCN_5t2xaM5qgxYjjLPbHaGFQF14du00ZwdPdVwD8LWdTVvOePHN58QDBrrg

குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகி, அன்பான அணுகுமுறையுடன் இருப்பீர்கள். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

சவால்களை சந்திக்க திறமையான அறிவார்ந்த திட்டம் தேவை. கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும். இன்று வேலைச்சுமை ஏற்படலாம். பணி சம்பந்தமான விஷயங்களில் பதட்டம் ஏற்படலாம். காதல் அல்லது திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மிகவும் பொறுமையோடு இருப்பது நல்லது.

https://lh4.googleusercontent.com/-A3S9tU4xszRxb6kxZHwFm5939ijgATt5fH1zmh908AKPPeFkJ_UPdVuN_GTAQ4W9PAItE1appyP8B_z4OYObGlBU-yqd7g-P9Ap8-z2K7KOJ4HGJIyhuRej8TzPcQpg_GCrnMESICjLRAyaFvcUbT25_RM7XvaOvUL8p6vVYOMkHhu-4Yd6L0x07Q

மகிழ்ச்சி தருணங்கள் இருக்காது. பணப்புழக்கம் குறைந்து காணப்படுவதால், சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. போராடியே வென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்படும். போராட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று திருப்திகரமான நாளாக அமைகிறது. உங்களின் முயற்சிக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கேற்ப பாராட்டு கிடைக்கும். தனித்திறமையால் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

https://lh5.googleusercontent.com/H3ZtcBdKQfJRTfZhXn6OvzdWtikrjH1OMAZHwsC7sn1c5f9uNSFHD0MIs5NJVij0zH8QYZzbphVk3tli_zjguTO2k8V4Y0rX244os8Gbcv0j6F6-o4EFMIhsFuWVFg4tY9zqQgwmMxtCfrxaOziEIclhcusA4SEGy221vUwbPYU-A8mRhDNIp6_nUg

இன்று பணவரவு அதிகமாக இருக்கும். செலவு போக சேமித்து வைக்கும் அளவிற்குப் பணம் கிடைக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருப்தி! 

அதிர்ஷ்ட நிறம்:  ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். எல்லாவற்றையும் பொறுமையாக சமாளிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருப்பதால், பணியிடத்தில் தவறுகளைத் தவிர்க்க முறையாக திட்டமிட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பிரச்சனை வர வாய்ப்புள்ளதால், நிதானமாகக் கையாள்வது நல்லது.

https://lh3.googleusercontent.com/M47GTiW9CroOz_d34wmj9_kUW-E0ooplvEWhJ0QQ49QA2QTR6Cg_FJZA-IIy9PQgSaVpcDL-ezzkhnseBlLw2BIfdsSoxejfMNTPfVPxK-0Hs0oXv0I0zemGcRnmc1I-rTy9nlVf15VJqfCpi7pzEmYoXlvIuEY9b0dBHWzpQSjnLienGXVrvNaBZg

பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. பணத் தேவை அதிகரிப்பதால், கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பதட்டம் நிலவுவதால் தலைவலி ஏற்படும். பதட்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

மனதில் நம்பிக்கை இருந்தால், உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்காக திறமைகளை வெளிக்கொணரும் சிறப்பான நாள். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாத சூழ்நிலை ஏற்படலாம். இருப்பினும், பணிகளை பொறுமையாக மேற்கொள்வது நல்லது. திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படலாம். பிரச்சனையை வளர்க்கவிடாமல் அதை தள்ளி வைப்பது நல்லது.

https://lh4.googleusercontent.com/GaYO_SZIgcpDdCf-4rWLH4uJTqbZnHMJF68LkLCPlMvBkLYmrIX8dn_blCxMwWUfR0kbzDf-agBSQZf4AJu7Q0OoIZTNfIteqieQ-U9o1EZ0dqKSPQvDQ8BlnFZ7pxe7e8jZnrQofghH0kTXasr_CZjjRmmxn3KFdte_bACJdNCElxbkxtDcTEsXPA

பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், மிகவும் கவனமாக பணத்தைக் கையாள்வது நல்லது. விவேகத்துடன் செயல்படுவது சிறந்த பலனைத் தரும். நம்பிக்கை! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைகள் ஏற்படலாம். இருப்பினும், உங்களது பொறுமை, திறமையின் மூலம் உங்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். பயணத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

https://lh5.googleusercontent.com/bZslrMfsXCjkEJOl5YrCklXlgCMzB0tuq6g_iOWWTGdklbQh1w4NwOiRu-0Vikl6JLevewhy9S3eUazSzwN9P_NTwvDHSLmsGGauN2qNmVQPpMAsGeVsyoeX5OTY0DEkJbjkkgIlojnToWu7yvsd5dDTDhk85kX2NdjOPrLhbtCXCFlF3MJCTloaKA

பண வரவு, செலவு இரண்டும் ஒரே நிலையில்  இருப்பதால், சம்பாதிக்கும் பணத்தை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். பதட்டம் அதிகமாக உண்டாகும். எனவே, அதிக பதட்டத்தை தவிர்த்து இருப்பது நல்லது. அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்  

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்