Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்ல இருக்கும்.. 18.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 17, 2022 & 11:30 [IST]
Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்ல இருக்கும்.. 18.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (18.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 01:30- 02:30 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுகமான நாளாக அமையும். தொழில் ஸ்தானத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரியளவு நஷ்டம் இருக்காது. நிதி நிலை மிதமான பண வரவு இருக்கும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கல்வி நிலையில் சிறிய கவன சிதறல் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் விடாமுயற்சி தொழிலில் இன்று நினைத்து பார்க்க முடியாத நல்ல பலன் அளிக்கும். பணியிடத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு பிறக்கும். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு, பாராட்டு கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக உள்ளது. கணவன் மனைவி உறவில் வருங்கால சிந்தனை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் எடுக்கும் முயற்சி அமோகமான வெற்றி அளிக்கும். பணியிடத்தில் உங்கள் மீது மதிப்பு பிறக்கும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை, போதுமான பணப்புழக்கம் உண்டு. 

திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும், அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும். நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். காதல் வாழ்வில் பேச்சின் மூலம் ஊடல் பிறக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், அதனால் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தொழிலில் பணிகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.  நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஆனால் செலவுகள் வரவை சரி செய்துவிடும். செலவைக் குறைக்க முடியாது.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். சந்தோஷமாக வீட்டில் பொழுது செல்லும். காதல் வாழ்வில் நட்பு அதிகரிக்கும், ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்லுவீர். உடல்நலத்தில் சிறிய அக்கறை வேண்டும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

தொழிலில் உழைப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும். பயணம் செய்யும் தருணம் உருவாகும், பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும். அலுவலகத்தில் உங்கள் செயலுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிதி நிலைமை ஓரளவு நன்றாக உள்ளது.

காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முயற்சி செய்வீர். நண்பர்களால் மனம் ஆனந்தமாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு வெகுமதி அளிக்கும். மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு நல்ல நிலை உண்டு. இன்று பணம் அதிகமாக செலவாகும். உங்கள் கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும். 

வீட்டில் அமைதியாக இருப்பது நிம்மதியைக் கெடுக்காது. இல்லற வாழ்வில் இன்ப அதிர்ச்சி இருக்கும். உடல்நலக் குறை ஏற்படும், ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (18.09.2022, ஞாயிறு)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்