Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Simmam Love Horoscope In Tamil : கம்பீரமான சிம்ம ராசியை மயக்கும் 5 ராசிகள் இதுவா.......!

Manoj Krishnamoorthi September 01, 2022 & 18:00 [IST]
Simmam Love Horoscope In Tamil : கம்பீரமான சிம்ம ராசியை மயக்கும் 5 ராசிகள் இதுவா.......!Representative Image.

காதல் செய்வதில் அதிகம் ஆசை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ஆவர். வெளியில் கரடு முரடாக இருந்தாலும் பழகினால் பச்சைக் குழந்தை என்பது போல் இலகிய மனம் கொண்டவர்கள். பொதுவாக இவர் நெருப்பு ராசி என்பதால் பல ராசிக்காரர்கள் இவருக்கு சிறந்த ஜோடியாக அமையாது. மனதில் தப்பு என்று தோன்றினால் தட்டி கேட்கவும் அஞ்சாத இவர்களை ஒரு சில ராசிகளுக்கு மிகவும் பிடிக்கும்.  இவர்களின் கோபத்தையும் கடந்து இவரின் ஆழ் மனதில் இருக்கும் காதலைக் கவரும் ராசிகள் எது என்பதை அறிய மேற்கொண்டு படிக்கவும்.   

சிம்ம ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Simmam Kadhal Seiyum Rasi In Tamil )

நவகிரகத்தின் தலைவன் சூரியனை ராசியின் அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி, இயற்கையாகவே மற்ற ராசிகளை அடக்கி ஆளும் ஆளுமை கொண்டவர்கள். மற்றவர்களைக் கவரும்  வசீகரம் மற்றும் கம்பீர தோற்றம் கொண்ட . சிம்ம ராசி ஆண்/ பெண் உகந்த ராசி பற்றி அறிய பின்தொடரவும். 

1. மேஷம்

 சிம்ம ராசிக்கு செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசி நல்ல ஜோடியாக இருக்க முடியும், இவர்கள் உறவில் சண்டை சச்சரவு வந்தாலும், பெரும்பாலும் இவர்களின் சிந்தனை ஒரு நிலையில் இருப்பதால் உறவு பாதிக்காது.

2. கடகம்

கடக ராசிக்காரரின் அன்பு சிம்ம ராசிக்காரரே எளிதில் கவர்ந்துவிடும், இந்த இரு ராசியின் உறவில் பெரும்பாலும் பிரச்சனை இல்லாமல் மனம் நிம்மதியாக வாழும் வாழ்க்கை இருக்கும். கடகத்தை அடக்கி ஆளும் திறன் இயற்கையாகவே சிம்மத்துக்கு வந்து விடும்.

3. மகரம்

மகரம் மற்றும் சிம்மம் ஓரளவு நல்ல ஜோடியாக இருக்க முடியும். இவர்களின் உறவில் நட்பு இருந்தால் உறவு நன்றாக இருக்கும்.  சிம்மம் பொறுமையாக இருந்த உறவில் பெரிய பாதிப்பு இருக்காது.  

4. தனுசு

குரு பகவனின் ஆதிக்கம்  நிறைந்த தனுசு ராசிக்காரர்கள் சிம்மத்துக்கு மிகச்சிறந்த ஜோடியாக இருக்க முடியும். இந்த உறவில் சிம்மத்தின் கை தான் ஓங்கி இருக்கும். 

5. கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்கு சிறந்த ஜோடியாக இருப்பார்கள், சமர்த்தியம் நிறைந்த இவர்களுக்கு சிம்ம ராசிக்காரர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்