Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பொறுமை தவறினால் இன்று பிரச்சனை தான்.... 6.9.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 05, 2022 & 14:40 [IST]
Nalaya Rasi Palan : பொறுமை தவறினால் இன்று பிரச்சனை தான்.... 6.9.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 21 ஆம் நாள் செவ்வாய் (6.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நாளைய ராசிபலன் (07.09.2022, புதன்கிழமை)

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (6.09.2022, செவ்வாய்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் உங்களை திறமையாக செயல்பட தூண்டாது, மேலும் வழக்கமான வேலையில் வரும் கவலை முயற்சி செய்வதில் தாமதமாக்கும். அலுவலகத்தில் வேலைகள் தடைபடும். வியாபாரத்தில் முழுமனதுடன் உழைக்க முடியாது.

குடும்ப வாழ்க்கையில் அமைதி காக்க விரும்புவீர்கள்.  உங்களின் அமைதி மற்றவர்களை ஆச்சரியம் ஆக்கும். புதிய மாற்றம் மனதில் பயத்தை அளிக்கும். ஆரோக்கியத்தில் முதுகு சார்ந்த தொல்லைகள் வரும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்:  3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம்.  இவ்வளவு நாட்களாக நிலுவையில் வைத்த காரியங்கள் இனி நடக்கும், நற்பலன் கிடைக்கும். பணியில் வெகுமதி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பதவி கிடைக்கலாம். செலவுகள் அதிகமாகும்.

குடும்பத்தில் நட்பாக நடந்து கொள்ளுவீர்கள். குடும்பத்தினரின் மனதை ஆனந்தமாக்குவீர். காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் சளி போன்ற சிறிய தொல்லைகள் வரலாம். விருத்தி! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் கனவை அடைய இன்று அதிகமாகப் போராட வேண்டியதாக இருக்கும், பணியில் சில சாதகமான பலன் கிடைக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு உங்களை தவறை சரி செய்ய உதவியாக இருக்கும். நிலையான செல்வ வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு மனதை அமைதி ஆக்கும். நண்பர்கள் மூலம் பிரச்சனை வரலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். தடை! 

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

 இன்று செல்லும் இடமெல்லாம் அன்பை விதைத்து வருவீர், உங்கள் மீது மதிப்பு அதிகமாகும். அலுவலகத்தில் உங்களின் நண்பான அணுகுமுறை பணியில் நல்ல முன்னேற்றம் அளிக்கும். சுய தொழிலில் நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பணப்புழக்கம் அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், பெற்றோருடன் வெளிப்படையாக மனம் திறந்து பேச முடியும்.  மாணவர்கள் கல்வியில் ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொடுத்து படிப்பர். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை வேண்டும்.  நட்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களுக்கு வேலை நிமித்தமாக வேலைச் சுமை அதிகமாகும், உங்கள் இலக்கை அடையப் பல மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். பணியில் கவனம் வேண்டும், போட்டிகள் ஏற்படலாம். அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும். நிதியை கவனமாக செலவு செய்ய வேண்டும், கட்டுப்படுத்த முடியாத செலவு வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவை, வேலையில் அழுத்தம் உங்களுக்கு வீட்டில் கோபத்தை அளிக்கும். காதல் வாழ்வில் வெளிப்படையான பேச்சு புரிதலை உருவாக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அலைச்சல்! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் சக பணியாளரிடமிருந்து உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும், கல்வி ஞானம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும்,  நிதி நெருக்கடி ஏற்படலாம்.  

வீட்டில் உணர்ச்சிவசப்படுவதால் மன வருத்தம் ஏற்படும்.  நண்பர்கள் மூலம் நிம்மதி கிடைக்கும். உடல் சோர்வாக இருக்கும், சிலருக்கு உடலில் கை கால் வலி பிரச்சனை இருக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:   மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Aroun Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்