Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: சிறப்பான செல்வ வரவு சந்தோஷமான வாழ்க்கை தான்... ஆனால் ரிஷபம்! 6.9.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 05, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: சிறப்பான செல்வ வரவு சந்தோஷமான வாழ்க்கை  தான்... ஆனால் ரிஷபம்!  6.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 21 ஆம் நாள் செவ்வாய் (6.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

நாளைய ராசிபலன் [07.09.2022, புதன்கிழமை]

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று மனதில் இருந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு  கிடைக்கும், பணியிடத்தில்  வேலைகள் சிறப்பாக நடக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு பணியை விரைவாக முடிக்க வைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியும். வீட்டில் புரிதல் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனை ஏதும் இருக்காது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் மனதை இன்று அமைதியாக வைக்க முயற்சி செய்யவும், தோல்வியின் பயம் மனதில் சிறிய கலக்கத்தை அளிக்கும். பணியிடத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது, மேலதிகாரியின் சில பாராட்டு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். 

இல்லற வாழ்வில் அன்பு அதிகமாகக் காட்டுவீர்கள். உங்களின் பேச்சு ஒருவித ஏக்கத்தை வெளிப்படுத்தும். காதல் வாழ்வில் அவசர முடிவு வேண்டாம். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று வழக்கமான வேலைகள் சிறப்பாக நடக்கும், புதிய முயற்சியில் ஏற்படும் தடைகள் உங்களுக்கு வேலையின் மீது சலிப்பு அளிக்கும். நம்பிக்கையான வார்த்தைகள் மீண்டும் முயற்சி செய்ய தூண்டும். பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும், தேவையில்லாத செலவுகள் வரலாம்.

திருமண வாழ்க்கை நல்லிணக்கமாக இருக்கும், புதிய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு நிம்மதி அளிக்கும். உடல்நலத்தில் சரியான ஓய்வு இல்லாததால் கோளாறு ஏற்படும். கால் வலி ஏற்படலாம். தாமதம்! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் கனிவான குணத்துக்கு இன்று திருப்திகரமான பண வரவு இருக்கும். தொழிலில் பணிகள் சிறப்பாக நடக்கும், குறித்த நேரத்தில் வேலைகள் நடக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு நல்ல மாற்றம் ஏற்படும். பணத்தை சேமிக்க இது சரியான  தருணமாகும்.

கணவன் மனைவி உறவில் சிறிய ஊடல் வந்து மறையும், வீட்டில் பதட்டம் நிலவும். வயதான கடக ராசியினர் மூலம் குடும்பத்துக்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் இல்லாத ஒன்றை நினைத்து கவலை கொள்ளும், தொழிலில் குறையில்லாமல் திறமையாக பணியாற்றுவீர்கள். தொழிலில் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.  அலுவலகத்தில் இனிமையாக பொழுது கழியும். செல்வ நிலை சிறப்பாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் ஏற்படும். நிதிநிலை பற்றிய ஆலோசனை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கவலை! 

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செய்யும் செயலின் வெற்றி நல்ல மதிப்பைக் கொடுக்கும்.  பணிகளில் வேலைகள் மும்முரமாக நடக்கும். உங்களின்  வியாபாரம் சிறப்பாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.  

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்வில் பல பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (6.09.2022, செவ்வாய்)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Aroun Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்