Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்பத்தின் உச்சத்தில் இருக்கும் 3 ராசிகள்…ஆகஸ்ட் 3, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi August 02, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இன்பத்தின் உச்சத்தில் இருக்கும் 3 ராசிகள்…ஆகஸ்ட் 3, 2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை (03.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய ராசிபலன் (ஆகஸ்ட் 04.2022, வியாழக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் நேர்மையான அணுகுமுறை தொழிலில் நல்ல பலன் அளிக்கும், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். லாபம் காண கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்க வேண்டும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கையில் கலந்துரையாடல் இருக்கும். இன்றைய தினம் காதல் வாழ்வில் பொறுமை அவசியமாகும். குடும்ப நபரின் மனதை புரிந்து கோள்ள இன்று ஒரு சந்தர்ப்பம் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் சாதுரியமான குணத்தால் பிறரை எளிதில் கவரும் உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். தொழிலில் திருப்தி இருக்கும்.  நிதி நிலையில் லாபம் என்பது பெரியதாக இருக்காது.கையிருப்பிலிருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்வில் ஆனந்தம் அதிகமாகும். கணவன் மனைவி ஊறவில் இருந்த பதட்டமான சூழல் மறையும். நண்பர்களின் ஆதரவு நன்மை அளிக்கும். உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் உதிக்கும். பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் கலகலப்பான பேச்சுக்கு தொழிலில் நல்ல வெற்றி தான், இருப்பினும் வார்த்திஅகளீல் கவனம் வேண்டும். முக்கியமாக வியாபாரத்தில் சகஜமாகப் பேசி போதுமான அளவு செல்வத்தை ஈர்த்துவிடுவீர்கள். ஓரளவு செல்வம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் புரிதல் உருவாகும், நேர்மறையான பிரச்சனைகள் சுமுகமாகும். காதல் வாழ்க்கையில் நட்பான சூழல் உதிக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக நகரும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை தோன்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் அக்கறையான பார்வையால் எதிரிகளையும் நண்பராக மாற்றும் குணம் இன்றைய தினத்தை சுகமான நாளாக மாற்றும். தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களின் திறமையால் அலுவலகத்தில் நல்ல மதிப்பைப் பெற்றுவிடுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

பிறரின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் உங்களுக்கு இன்றைய நாள் உங்களின் பிரச்சனை மனதில் பயத்தை அளிக்கும், பேச்சின் மூலம் சில சண்டைகளை இழுத்து கொண்டு வருவீர்கள். முக்கியமான பணியிடத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தொழிலின் முடிவு உங்களுக்கு பதட்டத்தை உருவாக்கும். செல்வ நிலையில் செலவு தான்  உயர்ந்து இருக்கும். 

வீட்டில் நட்பான முறையில் நடந்து கொள்ளுவீர்கள், கணவன் மனைவி உறவில் பிரச்சனை குறையும். நெருங்கிய நபர்களுக்கு சிறிய மருத்துவ செலவு உருவாகும். உடல்நலத்தில் தூக்கமின்மை சோர்வைத் தரும். அச்சம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

தன்மையான பேச்சால் பிறரிடம் இருந்து வேலையை நடத்தி கொள்ளும் உங்களுக்கு இன்று தொழில் ஸ்தானம் கடினமாக இருக்கும். குறித்த வேலையை முடிக்க மிகவும் சிரமமாக இருக்கும். கையில் போதுமான அளவு பணம் இருக்காது. 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், குடும்பத்தில் சில முக்கிய முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும்.  காதல் வாழ்க்கை விரிசல் ஏற்படும். மனதின் பதட்டம் உடல்நலத்தைக் கெடுக்கும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம்- மீனம்  ராசிபலன் (3:08:2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்