Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று இந்த 3 ராசியின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்க போகிறது..... ஜூலை 18, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 17, 2022 & 13:00 [IST]
Nalaya Rasipalan: இன்று இந்த 3 ராசியின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்க போகிறது..... ஜூலை 18, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                               Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை- 7:30- 9:00 வரை

மாலை- 1:30- 3:00 வரை 

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்களின் விருப்பமான துறையில் இன்று வெற்றி பெறும் வாய்ப்பு  அதிகமாக உள்ளது, இதுவரை தோல்வியில் முடிந்த விஷயம் இன்று  சாதகமாகும். கடினமான வேலைகளை எளியதாக முடிக்கும் வழியை அறிவீர்கள். அயல்நாடு சம்மதமாகத்  தொழில்  செய்வோருக்கு  அதிர்ஷ்டமான நாளாகும். நிதி நெருக்கடி பிரச்சனையில்  ஒரு தீர்வு கிடைக்கும், கையில் எதிர்பார்க்காத அளவு பண வரத்து இருக்கும். 

காதல் வாழ்க்கையில் சிறுசிறு ஊடல் வரும். திருமண வாழ்வு மிகவும் இன்பமாக அமையும், ஆனந்தமான தருணமாக அமையும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக அமையும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4  

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

ரிஷப ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாளாக அமையும், அலுவலகத்தில் உங்கள் சாமத்தியத்தால் கடினமான பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுபிடிப்பீர்கள். சக பணியாளரிடம் உங்களின் இனிமையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள், பணியிடத்தில் ஆனந்தம் ததும்பி விளையாடும். பண வரவு நன்றாக இருக்கும்.

வீட்டில் இன்று அன்பாக நடந்து கொள்வீர்கள். இல்லற வாழ்க்கை மிகவும் இன்பமாக அமையும். பழைய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:   7

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு ஆன்மீக  எண்ணம் அதிகமாக இருக்கும், பல நன்மைகள் நடக்கும். மனம் அமைதி அடையும். தொழில் ஸ்தானத்திலிருந்த பதட்டமான நிலை மறையும். வியாபாரம் சற்று இயல்பாக நடக்கும், ஓய்வு நேரம் கிடைக்கும். 

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது.செல்வ நிலை நன்றாக உள்ளது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:   6

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின்  சஞ்சாரம் சரியாக இல்லாததால் புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம், பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் அமையும் ஆனால் அதை ஏற்று கொள்ளலாம் ஆனால் புதிய வேலையில் இன்று புதிய முயற்சிகள் எதுவும் செய்யாதீர். நிதி நிலையில் பாதிப்பு இல்லை.

குடும்ப வாழ்க்கையில் இன்று அமைதியாக இருந்தால் நிம்மதி கெடாது, காதல் வாழ்க்கை இன்று எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது, மனதில் சிறிய குழப்பம் இருக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8   

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களின் விடாமுயற்சி குணத்துக்கு இன்றைய தினம் சாதுரியமான அணுகுமுறையை வைத்தால் கரியரில் நல்ல முன்னேற்றம் காணப்படும், மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும். இன்று நிதி நிலை சாதகமாக இல்லை. 

 இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நண்பர்களின் உதவி நன்மை பயக்கும். முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 9  

கன்னி (Virgo 2022 Horoscope)

கன்னி இராசி வாசகரே வேலையின் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் முழுமனதுடன்  உற்சாகத்துடன் உழைத்து நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். உங்களின் பொறுப்பான தன்மை அலுவலகத்தில் பதவி உயர்வைக் கொடுக்கும். சிறப்பான நிதி நிலைமை இருக்கும். 

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மாலைப் பொழுது இனிமையாகும்.  பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பொழுதை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. புகழ்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Part 2: துலாம் - மீனம் அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் (18.07.2022)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்