Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: முன் கோபத்தினால் அவதிப்படும் அந்த ராசிக்காரங்க நீங்க தானா...?

Gowthami Subramani July 28, 2022 & 15:26 [IST]
Nalaya Rasipalan: முன் கோபத்தினால் அவதிப்படும் அந்த ராசிக்காரங்க நீங்க தானா...?Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free

ஜூலை 29, 2022 – பஞ்சாங்கம்

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை

                      மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இராகு காலம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 3 மணி முதல் 4 மணி வரை

குளிகை: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

Nalaya Rasipalan

இன்றைய நாள் ஜூலை மாதம் 29 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 13 ஆம் நாளின் 12 ராசிகளுக்கான பலன்களைப் பற்றி இதில் காண்போம்.

நாளைய ராசிபலன் (29-07-2022, வெள்ளிக்கிழமை)

மேஷம் (Aries 2022 Horoscope)

மிகுந்த பொறுப்புடன் இருக்கும் மேஷ ராசி நேயர்களே, வீடு கட்டுமானம், உற்பத்தி சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களுக்கு யோகமான நாள். முன் கோபம் அதிகம் வரும். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வது மிக நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. அதுவும் முன் கோபத்தினாலேயே நிகழும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Tarus 2022 Horoscope)

எல்லாவற்றிலும் பொறுமையுடன் இருக்கும் ரிஷப ராசி நேயர்களே..! இன்று நீங்கள் எடுத்த அனைத்து முயற்சியும் வெற்றியிலேயே முடியும். முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய நன்னாளாக இந்நாள் உள்ளது. தொலைபேசியில் பேசும் போது, உங்களுடன் பேசுபவரிடம் சற்று கடிந்து கொள்வீர்கள். இருந்தபோதிலும், அதனையும் ஒரு வியாபாரமாக்கி வெற்றி பெறுவீர்கள். ரொம்ப நல்ல நாளாக அமைகிறது. வண்டி வாகனங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. அண்ணன், தம்பியிடையே இருக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இலகிய மனதைக் கொண்ட மிதுன ராசி நேயர்களே.. இன்று கண்டிப்பாக பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். முன் கோபத்தினால், பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாராவதையோ, இல்லை உங்களை யாராவதோ மிரட்டல் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் இருக்கும். பொறுமையுடன் இருப்பது மிக நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Cancer 2022 Horoscope)

மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் கடக ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்க உள்ளது. இதுவரை பொறுத்து கொண்ட விஷயங்களில் சீறிப்பாய்ந்து முன்னேற்றம் அடைவீர். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நல்ல ஒரு வேலையைத் தொடங்கும் நாளாக உள்ளது. எப்போதும் போல இல்லாமல் புதுவித முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் புதிதாக தொடங்கவிருக்கும் வேலை நல்ல விதமாக முடியும். நல்ல முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Leo 2022 Horoscope)

வார்த்தையால் வசீகரம் செய்யும் சிம்ம ராசி நேயர்களே! கைத்தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. இடமாற்றம் சார்ந்தவற்றில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று உங்களுக்கு யோகமான நாளாக அமையும். எல்லா விஷயங்களிலுமே நன்மைகளைப் பெறுவீர்கள். நல்லது!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

எதிலும் உறுதியோடு செயல்படும் கன்னி ராசி நேயர்களே! மிகப் பெரிய நபரின் உதவி கிடைக்கும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோரின் மூலம், நல்ல விஷயங்கள் நடக்கும். பிற்பகல் 12 மணிக்கு முன்பே உங்களின் எல்லா விதமான ஆசைகளும் நிறைவேறிவிடும். உங்கள் துணையுடன் அன்போடு இருப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும் நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (29-07-2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web  பக்கமான எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்