Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Mithunam : டிசம்பர் மாதம் முதல் மிதுன ராசிக்கு பொற்காலம் தான்....!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Mithunam : டிசம்பர் மாதம் முதல் மிதுன ராசிக்கு பொற்காலம் தான்....!Representative Image.

மிதுன ராசிக்காரரே டிசம்பர் மாதம் ராசியின் அதிபதி புதன் 6 இல் இருக்கிறார், இது என்ன பலன் அளிக்கும் என்ற உங்கள் ஐயம் புரிகிறது. மேலும் 5 இல் கேது, 6 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, மகரத்தில் சனி மற்றும் 10 இல் குரு, 11 இல் இராகு, 12 இல் செவ்வாய் வக்கிரமாக இருக்கும் செவ்வாய் இருப்பதால் 2022 என்ன பலன் கிடைக்கும் என்பதை கீழே பார்ப்போம்.  

டிசம்பர் மாத ராசிபலன் 2022- மிதுனம் (December Month Tamil Rasi Palan 2022 Mithunam)

December Month Tamil Rasi Palan 2022 Mithunam : டிசம்பர் மாதம் முதல் மிதுன ராசிக்கு பொற்காலம் தான்....!Representative Image

மிதுனம்

பொது பலன்:  

டிசம்பர் மாதத்தில் மனதில் இவ்வளவு நாட்களாக இருந்த கவலை நீங்கும். குரு சாதகமாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கை அளிக்கும். மொத்தத்தில் கஷ்டங்கள் நீங்கி வசந்தம் வீசும் மாதமாக அமையும்.  காதல் வாழ்வில் புரிதல் ஏற்படும், திருமணம் கூடும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க வைக்கும், வீட்டிற்கு தேவையான வசதிகள் அமையும். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கும். உறவினர் மத்தியில் அன்பு அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். 

தொழில்: 

தொழில் நிம்மதியாக மாறும். 10 ஆம் வீட்டில் இருக்கும் குரு தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். வருமானம் கூடும் நேரமாக அமையும், 11 இல் இருக்கும் இராகு நல்ல பணப்புழக்கம் அளிக்கும். வக்கிரமாக இருக்கும் செவ்வாய் எதிர்பாரா செலவை உருவாக்கும்.

உடல்நலம்: 

8 ஆம் வீட்டில் இருக்கும் சனியால் ஆரோக்கியத்தில் பிரச்சனை வராது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வயதான மிதுன ராசிக்காரருக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர்  25, 26

 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்