Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று செல்வ செழிப்பில் மிதக்கும் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் இவரா....இந்த பண வரவு நிலைக்குமா.. ஜூலை 3, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 02, 2022 & 16:46 [IST]
Nalaya Rasipalan: இன்று செல்வ செழிப்பில் மிதக்கும் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் இவரா....இந்த பண வரவு நிலைக்குமா.. ஜூலை 3, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                 Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

நம் வாழ்வின் நன்மையும் தீமையும் நம் செயலின் விளைவு என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று பண வரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் பெரிதாக இருக்காது. இன்று உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும், மேலும் ஆரோக்கியமாக இருப்பதால் எண்ணிய காரியங்களை நடைமுறைப்படுத்த முடியும். கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும். இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும். உங்கள் மனம் திறந்த பேச்சு இன்று பல பிரச்சனைகளை சரிசெய்யும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

ரிஷப  ராசியாளரே இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான வாழ்வைப்  பெறலாம், மேலும் வழக்கத்தை விட வேகமாக வேலைகளை செய்து வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் ஆரோக்கியம் மேம்படும்.  அலுவலகத்தில் வேலைகள் சீக்கிரம் முடியும், ஆதாயம் பெறுவீர்.இன்று காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும். திருமணம் கைகூடும். சிறந்த ஆரோக்கியம் இருக்கும். மாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அமைதியான வாழ்வை எதிர்பார்க்கும் உங்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும், நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் கனிவான பேச்சால் அனைவரையும் ஈர்த்து விடுவீர்கள். பணியிடத்தில் உங்கள் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவீர்கள், கவனக்குறைவால் தொழிலில் சிறிய சரிவு ஏற்படும். உங்கள் செல்வ நிலை சற்று சரியான நிலையில் இல்லை. குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் உருவாகும். கல்வி முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

கடக இராசியாளரே இன்று வெற்றி பெற மிகவும் அதிகமாகப் போராட வேண்டியிருக்கும். வெளியே செல்லும்முன் திட்டமிட்டு பயணம் செய்யுங்கள். இன்று செலவுகள் இயல்பை விடச் சற்று அதிகமாக இருப்பதால் கையில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருப்பதாக உணரப்படுவீர்கள், சுப காரியங்களுக்குச் செலவு செய்வதால் மன வருத்தம் தேவையில்லை. பிறரிடம் நிதி உதவி எதிர்பார்க்கும் சூழல் உருவாகும்.  பொது விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள், மனம் நிம்மதி அடையும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும் வாய்ப்புள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

அன்பான இதயத்தைக் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் இருக்கும் உங்களுக்கு சாதகமான நாளாக இல்லை, வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள். தொழில் உடன் வேலை செய்வோர் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, முயற்சி செய்தால் வெற்றி நிச்சியம். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பண வரவு பெரியதாக இருக்காது ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். மன வருத்தம் அடையும் கவலையை மறக்கத் தனிமையை விரும்புவீர். உங்கள் காதல் வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, திருமணத்தில் முடியும். கல்வி நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் சாதுரியமான பேச்சாற்றலுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும், பணியில் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து சக பணியாளரின் மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாகக் காணப்பட்டாலும் இன்று அதற்கு ஏற்ற செலவை செய்வீர்கள். கல்வி நிலை நன்றாக உள்ளது, உங்களின் சுற்றியுள்ளவர்களை இன்பமாக வைத்திருப்பீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனை பொறுமையாகச் சமாளித்து குடும்பத்தில் நல்லுறவை மேம்படுத்துவீர்கள். ஆனந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5


Representative Image. துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்