Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரரின் வளர்ச்சியை அணை போட்டாலும் தடுக்க முடியாது..... ஜூலை 12, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 11, 2022 & 14:00 [IST]
Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரரின் வளர்ச்சியை அணை போட்டாலும் தடுக்க முடியாது..... ஜூலை 12, 2022 ராசிபலன்!Representative Image.

Free Tamil Horoscope Full Predictions

வார ராசிபலன் 

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Sirappu Rasipalan 


 Part 2: மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (12.07.2022) செவ்வாய்க்கிழமை


துலாம் (Libra 2022 Horoscope)

அனைவரையும் சந்தோஷமாக வைத்து கொள்ள முயலும்  நீங்கள் இன்று மனம் கவர்ந்தவர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, ஒரு சிலர் பக்தி ஸ்தலத்தில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் கொண்டாட்டம் அதிகமாகும். செலவு பெரியதாக இருக்காது, பலமான பண வரவு உண்டு. மனதில்  ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக எண்ணம் இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சிதான் சூழலும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope) 

விருச்சிக   இராசிக்காரரே உங்களின் கண்ணியமான குணத்துக்கு இன்றைய தினம் பெரியதாகப் பாராட்டி இருக்காது, பிறருடன் வீண் வாக்குவாதம் வந்தாலும் அதை தவிர்ப்பது நேர விரையமாகுவதைத்  கட்டுபடுத்தும். வீட்டில் கோபம் அடையாமல் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். சரியான  ஓய்வு கிடைக்காததால்  உடல் சோர்வாக இருக்கும் மனம் பதட்டமாக இருக்கும். உடல்நலத்தில் கவனமாக இருங்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தனுசு ராசிக்காரரே உங்களின் இரக்கக் குணம்  இன்று பல புதிய மனிதர்களின் அறிமுகத்தைப் பெற்று தரும்,  தொழில் சிறக்கும். மாணவர்கள்  விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுடன் கல்வியிலும் முன்னேற்றம் காட்டுவார்கள். இன்று செல்வ நிலையில் திடீர் செலவு வரும், இன்று செய்யும் முதலீட்டில் கவனமாக இருங்கள் எதிர்பாராத இழப்புகள் ஏற்படும். திருமண வாழ்க்கை மிகவும் ஊடல்கள்  இருக்கும்,ஆனால் குடும்ப ஒற்றுமையில் பாதிப்பு இருக்காது. உடல்நலத்தின் மீது அதிக கவனம் காட்ட வேண்டும், சில தனுசு ராசியினருக்கு மன வருத்தம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Capricorn 2022 Horoscope)

கடுமையாக உழைக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் சற்று அசௌகரியமாகக் காணப்படும், முக்கியமாகத் தந்தை வழியில் சில பிரச்சனைகள் வரும். எனவே மனதை சாந்தமாக வைத்து கொள்ள முயலவும். தொழில் ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்கள் நிலைமை நன்றாக உள்ளது. வீட்டில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரும். உடல் இன்று அதிகமாக ஓய்வு எதிர்பார்க்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்கள் மனம் இன்று அனுபவிக்கும் மகிழ்ச்சி  உங்கள் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும்.  அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும்.  உங்களின் தன்மையான பேச்சு வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்கும்.  இன்று செல்வ நிலை சிறப்பாக உள்ளது. மேலும் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று நீங்கள் செய்யும் துடிப்பான காரியம் நல்ல பாராட்டைப் பெற்று தரும்,  தொழிலில் நல்ல  வளர்ச்சி காண முடியும்.  வேலையில் முன்னேற்றம் கண்டு பதவி உயர்வு அல்லது முக்கிய பொறுப்பு பெறுவீர்கள். குடும்பத்தாருடன் கலந்து உரையாடுவதன் மூலம் நல்ல புரிதல் ஏற்படும். மனம் உறுதியாக இருக்கும். நிதி ஸ்தானத்தில் திடீர் லாபம் வரும், பணத்தை சேமிக்க முடியும். ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்