Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இன்று இந்த ராசிக்காரர் கையில் பணம் விளையாடும்... ஜூலை 23, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 22, 2022 & 15:00 [IST]
Nalaya Sirappu Rasipalan: இன்று இந்த ராசிக்காரர் கையில் பணம் விளையாடும்... ஜூலை 23, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் ஆடி மாதம் 7 ஆம் நாள் சனிக்கிழமை தினத்தின் (23.07.2022) கிரக நிலை மாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளும் அடையும் பலனில் துலாம் முதல் மீனம் ஆகிய ஆறு ராசியின் பலனைக் காண்போம். 

வார ராசிபலன்

நல்ல நேரம்

காலை:12:15- 1:15 வரை

மாலை: 9:30- 10:30  வரை

  Nalaya Sirappu Rasipalan

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (23.07.2022)

துலாம் (Libra 2022 Horoscope)

இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் வேகம் சற்று குறைந்து காணப்படும் வழக்கமான வேலையை முடிக்கவே கடினமாக இருக்கும். வித்தியாசமான அணுகுமுறையில் செயல்பட்டால் ஜெயம் தான். ஆன்மீக நாட்டம் உருவாகும், இறை பிரார்த்தனையில் நேரம் செலவிடுவீர். செலவு சற்று அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்வில் வெளிப்படையான பேச்சு நெருக்கமாக்கும், காதல் வாழ்க்கையில் நண்பர்களின் உதவி கிடைக்கும். மனம் பதட்டமாக இருக்கும், உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  அமைதி தேவை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று இருக்கும் உற்சாகமான மனநிலை உங்களுக்கு தொழிலில் கவனம் செலுத்த தூண்டும், பெரிய மனிதர்களின் பார்வை  தொழிலை மேம்படுத்தும்.  பல புதிய ஐடியாக்களை பணியில் செலுத்துவீர்கள். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், சேமிப்பு அதிகரிக்கும். 

இல்லற வாழ்வில் இன்று இன்பமான நாளாக அமையும், பெற்றோருடன் ஆனந்தமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். காதல் வாழ்வில் இன்று சூடான வாக்குவாதம் சண்டையை உருவாக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களின் ஆசை சில ஏமாற்றத்தை அளிக்கும், தொழிலில் பெரிய வளர்ச்சி இல்லை. வியாபாரத்தில் அதீத லாபத்திற்காக புதிய முயற்சிகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி லாபம் இல்லை எனவே கவனமாக செலவிட வேண்டும்.

குடும்பத்தில் இன்று பொறுமை காப்பது மிக நல்லது, கணவன் மனைவி உறவில் முக்கிய முடிவுகளை நன்கு கலந்துரையாடி  எடுங்கள். குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு வரும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றி மறையும். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு குடும்பத்தினர், நண்பர்கள் என் அனைவரும் தேடி வந்து உதவி செய்வர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு வளர்ச்சி நிச்சியம். தொழில் ஸ்தானத்தில் இன்று உழைப்பு அதிகமாக தேவைப்படும், சக பணியாளரின் உதவி கிடைக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது.

வீட்டில் உங்கள் மீது அன்பு மழை பொழியும், உங்கள் தேவைகள் நிறைவேறும். நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும், உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  ஆதரவு!  

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

நாளைய விஷேசம் (24.07.2022, ஞாயிறு)

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் பணம் தேவையான அளவு கையிலிருக்கும், உங்கள் நீண்ட நாள் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வியாபாரம் சிறப்பாக உள்ளது. அலுவலகத்தில் உங்கள் மீது நல்ல மரியாதை பிறக்கும். தன ஸ்தானம் சிறப்பாக உள்ளது.

குடும்ப செலவுகள் சற்று இருக்கும், காதல் வாழ்வில் மனம் கவர்ந்தவரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது. உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று உங்கள் மனம் தெளிவாக இருக்கும், புதிய யோசனை அளித்து தொழிலில் லாபம் அளிக்கும். கையில் பணம் விளையாடும் வாங்கிய கடனை அடைத்துவிடுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி இருக்கும். காதல் உறவில் நல்ல நெருக்கம் உருவாகும். கல்வி ஸ்தானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்