Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: 24.07.2022 இந்த ராசிக்காரர் இன்றைய தினத்தில் பொறுமை தவறினால் அவ்வளவு  தான்…! 

Manoj Krishnamoorthi July 23, 2022 & 16:05 [IST]
Nalaya Sirappu Rasipalan: 24.07.2022 இந்த ராசிக்காரர் இன்றைய தினத்தில் பொறுமை தவறினால் அவ்வளவு  தான்…! Representative Image.

Nalaya Sirappu Rasipalan  

சுபகிருது வருடம் ஆடி 9 ஆம் நாள் சனிக்கிழமை (24.07.2022) தினத்தில் 12 ராசியும் கிரக நிலை மாற்றத்தால் பல நற்பலன்களை பெற்றுள்ளது. அதில் மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24, 2022) பெற்றுள்ள பலனைக் காண்போம்.

 

நாளைய ராசிபலன் (25.07.2022, திங்கள்)

வார ராசிபலன்(24.07.2022- 30.07.2022)

மாத ராசிபலன்

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 03:00-  04:00 வரை

Part 1: மேஷம்- கன்னி தினசரி ராசிபலன்(24.07.2022)

துலாம் (Libra 2022 Horoscope)

உங்களின் நிதானம் இன்று தடுமாறும் ஆனால் சுதாரித்து கொண்டு இயல்பு நிலைக்கு வருவீர்கள், தொழிலில் யதார்த்தமான அணுகுமுறை நல்ல முன்னேற்றம் அளிக்கும். பணியிடத்தில் வேலைகள் குறித்த நேரத்தில் முடியும். நிதி நிலையில் ஓரளவு லாபம் உண்டு ஆனால் வரும் பணம் கையில் நிற்காது.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது. காதல் வாழ்வில் இன்று சிறிய பிரச்சனை உறவை சீர்குலைய செய்யும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள் திடமான சிந்தனை திறன் இன்று நல்ல அங்கீகாரத்தை உருவாக்கி தரும், மேலும் உங்கள் தொழில் அசுர வளர்ச்சி காணும். வியாபாரத்தில் பல நாள் உழைப்புக்கு நல்ல பலன் உண்டு, திருப்திகரமான பண வரவு இருக்கும். உங்கள் வசதியை மேம்படுத்தும் அளவு சேமிப்பு உருவாகும். 

குடும்ப வாழக்கை மிகவும் இன்பமாக இருக்கும், உங்களின் இனிமையான பேச்சு குடும்பத்தில் ஆனந்தம் அளிக்கும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உடல்நலம் திடீரென பிரச்சனை அளிக்கும். அங்கீகாரம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று சில முக்கிய முடிவுகளைத் திறம்பட சிந்தித்து தெளிவாக ஆராய்ந்து சிறப்பான பலனளிக்கும் வகையில் எடுப்பீர்கள். தொழிலில் ஏற்படும் தடைகளை வளர்ச்சியாக மாற்றி பாராட்டு பெறுவீர்கள். நல்ல பண வரவு உண்டு.

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறையும், கணவன் மனைவி உறவில் செலவுகள் வாக்குவாதத்தை உருவாக்கும். திருமணமாகாத தனுசு ராசிக்காரருக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் வாழ்வில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும், மேலும் உங்கள் பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் சுய தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள், தொழிலில் மீண்டும் முதலீடு செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி கொள்ளவும்.

வீட்டில் இன்று பேச்சின் மூலம் சில ஊடல்கள் உருவாகலாம், எனவே பேச்சின் கவனம் வேண்டும். கணவன் மனைவி உறவில் புரிதல் ஏற்படும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்கள் சாதுரியமான நடத்தைக்கு இன்று சாதகமான பலன் கிடைக்கும், பணியிடத்தில் இன்று வேலைகள் மும்முரமாக நடக்கும், வெற்றியை நோக்கி வேகமாக நடக்கும். வியாபாரத்தில் இன்று வேலைச் சுமை கூடும். நல்ல செல்வ நிலை உள்ளது.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது, பெற்றோரின் உதவி மிகப்பெரிய பலமாக அமையும். அமைதியான மன நிலை கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. உழைப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் தொழில் ஸ்தானத்தில் ஒரு உயர்வாக இருக்கும், புதிய சிந்தனைகள் கூடும். உங்கள் சிந்தனை முயற்சி செய்ய ஒரு உதவி கிடைக்கும். இன்று பண வரவு பெரியளவு இருக்காது, கையிருப்பு அதிகமாக செலவாகும். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள்.

திருமண வாழ்வில் பொறுமையாக இருப்பது நிம்மதி அளிக்கும். வீட்டில் உங்கள் விருப்பத்துக்கேற்ற படியான சூழல் உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்