Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இவ்வளவு நாட்களாக அனுபவித்த கஷ்டத்தின் பலன் இவருக்கு இன்று கிடைக்கும்….. ஜூலை 25, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 24, 2022 & 10:30 [IST]
Nalaya Rasipalan: இவ்வளவு நாட்களாக அனுபவித்த கஷ்டத்தின் பலன் இவருக்கு இன்று கிடைக்கும்….. ஜூலை 25, 2022  ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் திங்கட்கிழமை (25.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

வார ராசிபலன் (24.07.2022- 30.07.2022)

மாத ராசிபலன் (ஆடி மாதம் 2022)

நல்ல நேரம்

காலை: 09:15-10:15 வரை 

மாலை: 04:45-  05:45 வரை

நட்சத்திர பலன் (25.07.2022, திங்கள்)

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று அனைவரின் மீதும் இரக்கமான பார்வை தோன்றும், வியாபாரம் இயல்பு நிலையில் இருக்கும். உங்கள் பணியிடத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும், கலந்துரையாடி முடிவெடுப்பது நல்லதாகும்.

வீட்டில் பேச்சினால்  இன்று வாக்குவாதம் ஏற்படும். உங்கள் கவனக் குறைவு இன்று பொருட் இழப்பை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். இரக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களின் ராசிக்கு இன்றைய தினம் லாபகரமான நாளாகும், நல்ல பண வரவு உண்டு.  தொழிலில் புத்துணர்ச்சியுடன் உழைத்து நல்ல வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமையான செயல்பாடு  நல்ல லாபம் அளிக்கும், புதிய வாடிக்கையாளரைப் பெற முடியும்.

குடும்ப வாழ்க்கை இன்று மகிழ்ச்சியாக நகரும், கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோருடன் விட்டு கொடுத்து வாழ்ந்து இன்பம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று தொழிலில் பார்க்கும் வெற்றி பல நாட்கள் உழைப்பின் பயனாக அமையும், இன்று நீங்கள்  தொழிலை மேம்படுத்த பல யுக்திகளைக் கையாளுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். கையில் போதுமான அளவு பண வரவு இருக்கும்.

குடும்பத்துடன் ஆனந்தமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவன் மனைவி  உறவில் இன்றைய நாள் நிம்மதியாக நகரும், அடுத்த  கட்ட வாழ்வில் முன்னேற்றத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். உடல்நலத்தில் பாதம் அல்லது மூட்டு சம்பந்தப்பட்ட வலிகள் இருக்கும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று மனம் வழக்கத்தை விட அதிகமான சந்தோஷத்தில் திளைக்கும்,  சக பணியாளருடன் இயல்பான மனதுடன் நிம்மதியாக பணியாற்ற முடியும்.  அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், வேலைகள் வேகமாக நடக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது, பண தேவைகள் பூர்த்தியாகும். 

குடும்ப வாழ்வில் சிறிய ஊடல் உருவாகும், ஆனால் மகிழ்ச்சியைப் பாதிக்காது. காதல் வாழ்க்கை திருமணப் பந்தமாக மாற்ற முயற்சி நடக்கும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை வரும், ஓய்வு தேவைப்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்று வெற்றியை நோக்கி உற்சாகமாகப் பயணிப்பீர்கள், கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பர். மொத்த வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் புதிய முயற்சிகளை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி காணும் வரை போராடுவீர். நிதி நிலை போதுமான அளவு இருக்கும், தவிர்க்க முடியாத செலவுகள் வரும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக நகரும், குடும்பத்தினரின் அன்பு உங்களை உற்சாகம் ஆக்கும். திருமண வாழ்க்கையில் புரிதல் ஏற்படும். உடல்நலத்தில் சிறிய கவனம் தேவை. உற்சாகம்! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் மனம் கவலையாக இருக்கும், புதிய முயற்சி எடுக்க அஞ்சும். ஆனால் உங்களின் விடாமுயற்சி தொழில் ஸ்தானத்தில்  பெரிய பிரச்சனை அளிக்காது, சக பணியாளரின் உதவி வேலைச் சுமையை சரிக்கட்டும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், செலவுகள் கட்டுப்படுத்த சிரமமாக இருக்கும்.

வீட்டில் அமைதியான சூழல் இருக்கும், உங்கள் மனக் கவலை குடும்பத்தினரின் ஆறுதலால் சரியாகும். காதல் வாழ்க்கை சில மனக் கசப்புகள் உருவாகும். உடல்நலத்தில் பாதிப்பு இல்லை. வருத்தம்!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (25.07.2022, திங்கள்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்