Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 23, 2022 & 13:01 [IST]
Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் திங்கள்கிழமை (24.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

துலாம்- முயற்சி

விருச்சிகம்- பயம்

தனுசு- அசதி

மகரம்- பயம்

கும்பம்- செலவு

மீனம்- நேர்மை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (24.10.2022 திங்கள்) 

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் செல்வாக்கு அதிகமாகும், சுற்றத்தாரின் மதிப்பு கிடைக்கும். நிலுவை வேலைகளை முடிக்க பல புதிய திட்டங்களை எடுப்பீர். செல்வ  நிலை நன்றாக உள்ளது.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், நகைச்சுவையான பேச்சு அதிகமாகும். நண்பர்களிடம் இருந்து நல்ல தகவல் கிடைக்கும்.  உடல்நலத்தில் சளி போன்ற தொல்லை ஏற்படும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

Also Read : Suriya Kiraganam 2022 Pariharam : 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழிலில் பல சவாலான தருணங்களைச் சமாளிக்க வேண்டும். தோல்வி பயம் உருவாகும். வழக்கமான வேலையில் தடுமாற்றம் ஏற்படும். இன்று ஏற்படும் செலவுகள்  மனம் வருத்தம் ஆகும். 

திருமண வாழ்வு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் மூலம் நிம்மதி கிடைக்கும்.  உடல் நலத்தில் சிறிய தொல்லைகள் வரும், மருத்துவச் செலவுகள் வரும் வாய்ப்பு உள்ளது. பயம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். அலுவலக வேலையில் கவனம் அதிகமாக இருக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனை ஓங்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 

டும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வாரிசுகளின் மூலம் சந்தோஷமான சூழல் உருவாகும். இல்லற வாழ்வில் புரிதல் இருக்கும். உடல் ஓய்வு தேடும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கலகலப்பான மனது இருந்தும் உங்களுக்கு இனம்புரியாத பயம் இருக்கும். பழைய சொந்தங்களை பார்ப்பீர். தொழிலில் இருக்கும் தொய்வு மனதில் குழப்பத்தை விதைக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப நபரின் அக்கறை உங்களுக்கு மனதில் நம்பிக்கை அளிக்கும், மாலை பொழுது ஆனந்தமாக இருக்கும். மனதிற்கு நெருக்கமானவரின் ஆசை நிறைவேற்ற முடியும். பதட்டமான மனநிலை ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பணியாளரின் ஒத்துழைப்பு நல்ல பலன் அளிக்கும். தொழிலில் நல்ல அனுபவம் கிடைக்கும்.  பண விசயத்தில் சிக்கனம் தேவை, கவனமாகச் செலவு செய்யுங்கள். 

திருமணப் பந்தத்தில் நல்ல புரிதல் ஏற்படும். உறவினர் வருகை இருக்கும், மனம் உற்சாகமாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : செலவை பார்த்து நடுக்கம் கொள்ளும் ராசிகள்.... 24.10.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களுக்கு சில கஷ்டங்கள் வரும் அதனால் சமநிலைத் தவறாமல் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும்.  தொழிலில் இருக்கும் கவலை மற்ற சிந்தனை அளிக்காது. செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.  நண்பர்களுடன் வேடிக்கையான பேச்சு விரிசலை உருவாக்கும், பேச்சில் கவனம் தேவை. நேர்மையான நடத்தையால் மதிப்பு கூடும். உடல்நலத்தில் கால் வலி ஏற்படும். நேர்மை!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்