Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காசு வருதேன்னு அதிகமா செலவு செய்யாதீங்க அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | Panguni Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin Updated:
காசு வருதேன்னு அதிகமா செலவு செய்யாதீங்க அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | Panguni Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் கும்பம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனிமீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

காசு வருதேன்னு அதிகமா செலவு செய்யாதீங்க அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | Panguni Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

பேசுவதை தொழிலாகக் கொண்டவர்களுக்கு நல்ல வளர்ச்சி அமையும். பொருளாதாரம் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் ஏற்றத்துடன் இருக்கும். தங்கம் வாங்கும் அமைப்பு உள்ளதால் உங்களின் மனைவி, தாய், மகள் ஆகியோர்களுக்கு வாங்கி தந்து மகிழுங்கள். முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பிற்காக காத்திருந்தால் அது நிச்சயம் கிடைக்கும். இந்த மாதம் முழுக்க உங்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும்.

காசு வருதேன்னு அதிகமா செலவு செய்யாதீங்க அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் | Panguni Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

பல விதமான ஆசைகள் ஏற்படும், எனவே அதனை மட்டும் யோசித்துக் கொண்டு விபரீதமான முடிவுகளை எடுத்து விடாதீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானமாக இருந்து யோசித்து செயல்படுங்கள். அநாவசியமாக செலவுகளை மேற்கொள்ள நினைப்பீர்கள், அதனை சற்று கட்டுப்படுத்துங்கள். உடன் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வேலை, படிப்பு ஆகியவற்றில் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். மூக்கு, வாய், தொண்டை சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் வரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்