Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்டிப்பா உங்க காதல் சக்சஸ் தான் | Panguni Month Rasi Palan 2023 Dhanusu in Tamil

Priyanka Hochumin Updated:
கண்டிப்பா உங்க காதல் சக்சஸ் தான் | Panguni Month Rasi Palan 2023 Dhanusu in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் தனுஷ் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி,  மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கண்டிப்பா உங்க காதல் சக்சஸ் தான் | Panguni Month Rasi Palan 2023 Dhanusu in TamilRepresentative Image

புது வீடு, வாகனம், மனை என்று சொத்து சேர்க்கும் யோகம் உள்ள மாதமாக அமையும். உங்கள் குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும் வகையில் சுப காரியங்கள் நடைபெறும். இப்படி எல்லா நன்மைகளும் பொருந்தி வரும் மாதத்தில் குடும்பத்தில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புரோக்கர் அதாவது கமிசன் வாங்கி வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அமையும்.

கண்டிப்பா உங்க காதல் சக்சஸ் தான் | Panguni Month Rasi Palan 2023 Dhanusu in TamilRepresentative Image

அம்மா வழியாக நல்ல காரியங்கள் நடைபெறும். எனவே, தாயை மதித்து அவரை புரிந்து நடந்து கொள்ளுங்கள். நீண்ட காலமாக குழந்தை வரன் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி கூடிய விரைவில் வரும். உடல்நிலை சீராக இருக்கும், தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்வீர்கள். இதுவரை கடனால் மன அழுத்தத்துடன் இருந்தீர்கள் என்றால் அதில் இருந்து மீள போகிறீர்கள். தங்கள் காதல் சேறுமா சேராதா என்று பயத்தில் இருந்தால், கவலை வேண்டாம் உங்களுக்கு காதல் சேர்ந்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்