Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குறிப்பா இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.. | Panguni Month Rasi Palan 2023 Mesham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
குறிப்பா இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.. | Panguni Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி,  மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குறிப்பா இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.. | Panguni Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் பொருளாதார லாபம் சிறப்பு. மனதிற்கு பிடித்த சம்பவங்கள் நடக்கும். இருக்கக்கூடிய கடன் தொல்லைகள் குறைய தொடங்கும். வெளிநாட்டு தொடர்புகள் நன்மையை தரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். நரம்பு, தோல் ரீதியான பிரச்சனைகள் விலகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடு விலகி, அந்நோனியம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு பணி மாற்றம் உண்டு. நகை சார்ந்த தொழில் செய்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்களுக்கு அற்புதமான மாதம்.

குறிப்பா இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தான்.. | Panguni Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

பூமி, மனை வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்ல வாய்ப்புண்டு. இருப்பினும், அரசாங்க பணியில் இருப்பவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தகப்பனாருக்கு மருத்துவ செலவு ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். திருமண பேச்சுக்கள் தடைபடும். எனவே, இரண்டு மாதங்களுக்கு திருமண பேச்சுகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

வழிபாடு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழிபாடு செய்வதன் மூலம் மேன்மை ஏற்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்