Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 கடகம்:

பேச்சு ராஜ கம்பீரமாக இருக்கும். பயந்து பயந்து பேசிய இடத்தில் தைரியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். இருப்பினும், மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். குடும்பத்தில் நீங்க பேசிய பேச்சு உங்களுக்கே எதிராக மாறும். யாரிடமும் வாக்குறுதியை மட்டும் கொடுத்துவிடாதீர்கள். நிச்சயம் நிறைவேற்ற முடியாது. குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியில் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் நன்மதிப்புற்கு பங்கம் ஏற்படவாய்ப்புள்ளது. திடீர் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த சிலவிஷயங்களில் தடை, தாமதம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 சிம்மம்:

கணவன் - மனைவியே இருந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். அன்பு, பாசம், அன்னோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற செலவினங்கள் பாதியாக குறையும் மாதம். நீங்கள் முடியாத என்ற நினைத்த காரியத்தையும் முடித்து காட்டும் யோகம் உண்டு. பணியிடத்தில் திறமை வெளிபடும். மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகள் தடை, தாமத்திற்கு பிறகே நடந்து முடியும். இருப்பினும், குழந்தைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. படிக்கும் மாணவர்களை கண்டிக்காமல் அறவணைத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் சின்னசின்ன பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் ஏமாற்றம், அவமானம், பிரச்சனைகளை சந்திப்பீங்க.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 கன்னி:

நண்பர்களால் சில அவமானங்களை சந்திக்க நேரிடும். சிலர் நண்பர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வாய்ப்புள்ளதால், பணம் கொடுப்பதை தவிர்க்கவும். அதேபோல், அவர்களிடம் உங்களுடைய வண்டி, வாகனங்களை நம்பி கொடுக்க வேண்டாம். குறிப்பாக, பெண்கள் ஆண் நண்பர்களிடம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய காலக்கட்டம். மூத்த சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகள் வரும். கால் நரம்புகள் சார்ந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மின்சாரத்தால் பாதிப்பு வரலாம் கவனம் தேவை. மாதத்தின் இடைப்பகுதியில், தொழில் மாற்றம், வீடு மாற்றம், பணி மாற்றம் போன்ற சிந்தனைகள் மேலோங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். குழந்தைகளின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் குறையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்