Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரு, சுக்கிரன் சேர்க்கையால் மிதுனத்துக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்... | Panguni Month Rasi Palan 2023 Midhunam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
குரு, சுக்கிரன் சேர்க்கையால் மிதுனத்துக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்... | Panguni Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி,  மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குரு, சுக்கிரன் சேர்க்கையால் மிதுனத்துக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்... | Panguni Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image

இந்த பங்குனி மாதத்தில் கட்டின வீட்டை வாங்கி கிரகப்பிரவேசம் செய்யும் வாய்ப்புண்டு. சிலருக்கு தாய்வழி சொத்து கைக்கு வரும். விவசாயம் தொழில் செய்வோருக்கு அற்புதம். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். திடீர் சம்பள உயர்வு உண்டு. கடன் பிரச்சனையை முடிவுகட்ட ஒரு அற்புதமான வாய்ப்பு ஏற்படும். பணவரவு அமோகமாக இருக்கும். செய்யும் தொழில் திடீர் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும் மாதம் என்றே சொல்லலாம். 

குரு, சுக்கிரன் சேர்க்கையால் மிதுனத்துக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்... | Panguni Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image

அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு பணிநியமனம் கிடைக்கும். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். காதல் கைக்கூடும். நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆதாயங்கள் அதிகமாக ஏற்படும். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். ஒருசிலருக்கு மிகப்பெரிய செல்வந்தராக மாறக்கூடிய யோகமும் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடந்து முடியும். புதிய நபர்களின் நட்பு மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் ஏற்படும்.

வழிபாடு: ஸ்ரீ கிருஷ்ணன் வழிபாடு மேன்மையான பலன்களை கொண்டு வரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்