Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

தனக்கென ஒரு தனி வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றியில் திகழப் போகும் விருச்சிக ராசி நேயர்களுக்கு.. | Panguni Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Gowthami Subramani Updated:
தனக்கென ஒரு தனி வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றியில் திகழப் போகும் விருச்சிக ராசி நேயர்களுக்கு.. | Panguni Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி,  மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 
 

தனக்கென ஒரு தனி வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றியில் திகழப் போகும் விருச்சிக ராசி நேயர்களுக்கு.. | Panguni Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image

குழந்தை வரன் வேண்டி ஏங்கித் தவிக்கும் விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த மாதம் குழந்தைப் பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் மாதமாக அமைகிறது. வெளிநாடு உத்தியோகங்கள் தேடி வரும். அதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும். முக்கிய வேலைகளைக் கண்காணிக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் அமைகிறது. பொருளாதார ஏற்றம் சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், உங்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். அதிக வருமானம் ஈட்டி பண வரவைப் பெருக்கிக் கொள்ளும் மாதமாக இந்த மாதம் உள்ளது.
 

தனக்கென ஒரு தனி வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றியில் திகழப் போகும் விருச்சிக ராசி நேயர்களுக்கு.. | Panguni Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதம் ஆகும். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். எல்லோர் வழியிலும் செல்லாமல், தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியையும் பெறுவீர்கள். தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளக் கூடிய மாதமாகும். தாமதமாக வெற்றி பெறக்கூடியதாக இருந்தாலும், எடுக்கும் முயற்சியில் வெற்றி உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும். குரு புண்ணிய ஸ்தானமான 5 ஆம் இடம் உங்களுக்கு ஏற்றத்தைத் தரக் கூடியதாக அமைகிறது.

வழிபாடு: தினந்தோறும் முருகப் பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதால் நினைத்த காரியங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்