Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Sani Peyarchi Pariharam | சனி பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் தான் ஒரே வழி..!

Manoj Krishnamoorthi September 28, 2022 & 12:00 [IST]
Sani Peyarchi Pariharam | சனி பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் தான் ஒரே வழி..!Representative Image.

கர்ம வினைப்பயனை அளிக்கும் கிரகம் சனி ஆகும். சனியின் தாக்கம் ஒருவனின் வாழ்வில் மிகப்பெரிய பாடமாக அமையும். ஆனால் அந்த பாடம் கற்கும் நேரமான சனி பெயர்ச்சி ஒருவன் வாழ்வில் மிகவும் இக்கட்டான சூழலாக அமையும். அதுவும் ஏழரை சனி என்றால் சொல்ல வேண்டாம் நம் மனதிற்குள் ஒரு போராட்டம் ஆரம்பித்துவிடும், ஆனால் கவலை வேண்டாம் சனியின் பாதிப்பை குறைக்கும் பரிகாரம் என்னவென்று அறிய வேண்டுமா..? இந்த பதிவை பின்தொடரவும்.

Sani Peyarchi Pariharam | சனி பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் தான் ஒரே வழி..!Representative Image

ஏழரை சனி யாருக்கு? (Sani Pariharam)

ஒரு மனிதன் தன்னிலை மறந்து ஆணவத்தில் செய்த காரியங்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கும் நீதிமான் சனி பகவான் ஆவார். சனி பகவான் அமரும் ராசிக்கு முன் மற்றும் பின் ராசிகள் ஏழரை சனி அடையும். 

பாத சனி- மகரம்

ஜென்ம சனி- கும்பம்

விரைய சனி- மீனம்

Sani Peyarchi Pariharam | சனி பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் தான் ஒரே வழி..!Representative Image

என்ன பரிகாரம்? (Sani Pariharam)

நாம் செய்த காரியத்தின் வினைப்பயனை தான் சனி பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் அளிப்பார். பெரும்பாலும் சனியின் பார்வை நம் மீது இருக்கும் போது நமக்கு சில சங்கடங்கள் வருவது போலத் தோன்றும், ஆனால் இந்த காலம் அனுபவமாக அமையும். இதை தடுப்பது என்பது சாதியமில்லை, சனி தாக்கம் நிச்சியம் நமக்கு கிடைக்கும்.  நாம் செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய தருணமாக சனி பெயர்ச்சி காலமாகும்.

  • ஒரு கைப்பிடி அளவு எள்ளு எடுத்து நீரில் ஊற வைத்து கொள்ளவும்.  இதை வெள்ளிக்கிழமை இரவே  செய்து கொள்ளவும்.  பின் விடிந்த பிறகு சனிக்கிழமை அன்று காலையில் ஒரு நீல நிற துணியில் கட்டி ஆற்றில் அல்லது தெய்வ ஆலயத்தில் ஒரு மரத்தின் அடியில் போட்டு விடவும்.  
  • இதை போடும்போது "ஓம் சனைச் சராய நமக" என்ற மந்திரத்தை இரண்டு முறை சொல்லி  உச்சரிக்க வேண்டும்.  

இவ்வாறு மாதம் ஒருமுறை ஏழரை சனிகாலத்தில் செய்வதால் சனி பகவானின் தாக்கம் சற்று குறையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்