Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Daily Rasi Palan: MAY 15, 2022 சண்டே ஸ்பெஷல்!.. பண மழையில் திளைக்கப் போகும் அதிர்ஷ்டசாலி நீங்களா!

Manoj Krishnamoorthi May 14, 2022 & 06:40 [IST]
Tamil Daily Rasi Palan: MAY 15, 2022 சண்டே ஸ்பெஷல்!.. பண மழையில் திளைக்கப் போகும் அதிர்ஷ்டசாலி நீங்களா! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்த்த மேஷ இராசியாளரே இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள், மேலும் வழக்கத்தை விடச்  சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் வேலைகள் சீக்கிரம் முடியும்,  சக பணியாளரின் உதவி  வேலைச் சுமையைக் குறைக்கும் . இன்று காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும். திருமணம் கைகூடும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

மிக அழகாகவும் வசிகரத் தோற்றமும் பிறப்பிலிருந்து கொண்ட ரிஷப  இராசி அன்பரே இன்று  உங்களுக்கு உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு நல்ல ரிசல்ட் தரும், ஆயிலான உணவுகளைத் தவிர்க்கவும். இன்று செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும், பாராட்டு கிடைக்கும். வீடு கட்டும் யோகம் இருக்கிறது, முயற்சி செய்தால் அது நிறைவேறும். வருத்தமாக இருந்தாலும் அலுவலகத்தில் மகிழ்ச்சி சூழும்.நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini 2022 Horoscope)

புன்னகையால் அனைவரையும் ஈர்க்கும்  மிதுன இராசிக்காரேர உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வீடு தேடி வரும். மிதுன ராசியினருக்கு இன்று எங்கும் முதன்மை நிலையில் திகழ்வர், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். நல்ல வழிகாட்டல் கிடைக்கும். அலுவலகத்தில் இருக்கும் எதிர்ப்புகளை எளிதில் சமாளித்துவிடுவீர்கள் திருமண வாழ்வு மிகவும் நன்றாக இருக்கும் மறக்க முடியாத அளவிற்குச் சந்தோஷம் இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கும் கடக  இராசிக்காரரே செலவு ஓரளவு இருக்கும், எதிர்கால சேமிப்பில் அக்கறை காட்டுவீர். இன்று காதல் வாழ்க்கை செழிக்கும். வேலையில் ஆர்வம் அதிகமாகும், பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. நாம் செய்யும் செயலின் விளைவு ஏதுவாக இருந்தாலும் அதை நாம் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை உங்களை முன்னேறத் தூண்டும். திடீர் கோபம் வரும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

கடினமான நேரத்திலும் மன உறுதியைக் கைவிடாமல் நிம்மதியாக இருக்க முயற்சி செய்யும் சிம்ம ராசிக்காரரே இன்று உங்களுக்கு வேலை தொடர்பான வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலை திருப்பதிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். உங்கள் வழக்கமான பணியை முடிக்க அதிக நேரம் தேவைப்படாது, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நிம்மதி! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Virgo 2022 Horoscope)

சரியான திட்டமிடல் மூலம்  காரியத்தைத் தெளிவாகச் செய்யும் உங்களுக்கு இன்று அருமையான நாளாகும்,  உங்கள் தொழில் வளர்ச்சி அருமையாக இருக்கும், வேலையில் நிலைகொண்டு இருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில்  அனைவரின் மனதையும் புரிந்து கொள்ளுவீர்கள். இன்று உங்களின் ராசிக்கு செல்வ நிலை சரியில்லை, தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும். உடல் மற்றும் மனநிலை இரண்டும் சீராக இருக்கும், அமைதியான நிலை இருக்கும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. தீர்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

 

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம் (Libra 2022 Horoscope)

இருக்கும் இடத்தில் தன் முக்கியத்துவத்தை விரைவில் உணர்த்தும் துலாம் ராசிக்காரரே இன்று உங்களின் ராசிக்கு செய்யும் காரியம் நல்ல பலனை அளிக்கும், மற்றவரின் எண்ணங்களைப் புரிந்து வேலை செய்வீர்கள். இன்று உருவாகும் செலவுகள் செல்வ நிலையைப் பாதிக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உடல்நலம் கவனமாக இருக்க வேண்டும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

கடமைக்காக அயராது உழைக்கும் விருச்சிக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாகும், முடிக்காத வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதிகமான செலவு செய்வீர்கள்.உடல்நலம் நன்றாக உள்ளது, முறையான உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

யதார்த்தமான குணநலன் கொண்ட தனுசு ராசிக்காரரே இன்று உங்களுக்கு கல்வியில் அமோகமான வளர்ச்சி இருக்கும், பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் தோன்றும், சிலர் ஆன்மீக பயணம் செல்வார்கள். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும், சிறிய உடல் உபாயங்கள் யாவும் படிப்படியாகக் குறையும். திருமண வாழ்க்கையில் நல்லுறவு இருக்கும். புரிதல்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn 2022 Horoscope)

தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடுமையாக உழைக்கும் மகர ராசிக்காரரே இன்று உங்களுக்கு தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். இரும்பு வியாபாரம் செய்பவருக்கு அதீத லாபம் கிடைக்கும், இன்று பண வரவு அதிகமாக இருக்கும், இன்று உங்கள் ராசிக்கு குடும்பத்தில் கலந்து உரையாடி  முடிவெடுப்பது நல்ல பலன் அளிக்கும், இன்று செல்வ நிலை அமோகமாக உள்ளது. ஆரோக்கியம் மேம்படும், இதுவரை  இருந்த சிறிய பிரச்சனைகள் தீரும். புதிய கல்வி தொடர்பான சிந்தனைகள் தோன்றும். திடீரென  விருந்தில் கலந்து கொள்ளுவீர்கள். அனுபவம்!   

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்பமான மனநிலையில் இருக்கும் கும்ப ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு சிறப்பான நாளாகும், தேவையற்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து வளமான வாழ்க்கை முயற்சி செய்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு ஊடல்கள் உருவாகும். இன்று தொழில் வழக்கத்தைப் போல் இருக்கும். கவனக் குறைக் காரணமாகப் பண விரையம் ஏற்படும், செல்வத்தைக் கவனமாக கையாள வேண்டும். பண விரையம்!  

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

மேலும் படிக்க: PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் வைகாசி ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று செய்யும் காரியத்தில் அதிகமான கவனம் கொண்டு இருப்பது பணிகளில் நடக்கும் தவறைக் குறைக்கும், இன்று உங்கள் செல்வ நிலையில் முன்னேற்றம் இருக்காது. பணம் விரையம் ஆகும்.  வீட்டில் பேசும் போதுன் அதிக எரிச்சல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்படும். தியானம் மேற்கொள்வது கோபத்தைக் குறைக்க உதவும். இன்று உங்கள் வியாபாரத்தில் பொறுமை மிக  அவசியமாகும். எரிச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்