Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எட்டாம் வீட்டில் சனி பகவான்! கண்டிப்பா இது நடந்தே தீரும்..! | Tamil New Year Rasi Palan 2023 Kadagam

Gowthami Subramani Updated:
எட்டாம் வீட்டில் சனி பகவான்! கண்டிப்பா இது நடந்தே தீரும்..! | Tamil New Year Rasi Palan 2023 KadagamRepresentative Image.

அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் கடக ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம். 

எட்டாம் வீட்டில் சனி பகவான்! கண்டிப்பா இது நடந்தே தீரும்..! | Tamil New Year Rasi Palan 2023 KadagamRepresentative Image

கடகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023

இந்த ஆண்டு வேலைவாய்ப்புப் பெற நினைப்பவர்களுக்கு, சிறந்த வாய்ப்பாக அமையும். சிறு சம்பளமாக இருந்தாலும், அனுபவத்தை வைத்துக் கொண்டாவது வேலைவாய்ப்பைப் பெற்று விடலாம். கஷ்ட காலத்திலும், வருமானம் ஈட்டும் சிறந்த காலமாக அமைகிறது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் காணப்பட்டாலும், சுப விஷயங்கள் நடக்கப் போகும் நாளாக அமையும். சுப விஷயங்கள் நடந்தாலும், பாதி நன்மை, பாதி தீமை என்பதிலேயே இருக்கும். சுப காரியங்கள் நடக்கும். 
 

எட்டாம் வீட்டில் சனி பகவான்! கண்டிப்பா இது நடந்தே தீரும்..! | Tamil New Year Rasi Palan 2023 KadagamRepresentative Image

திருமண வரன் அமையாதவர்களுக்கு வரன் அமையும். இருப்பினும், பிரச்சனைக்குரியதாகவே அமையும். 8 ஆம் வீட்டில் சனி இருப்பதால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை உண்டாகலாம். எனவே, எல்லா விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்வது சிறப்பு. அதே போல, வருமானத்தில் அதிக அளவு லாபம் இல்லையெனினும், அதிக வீழ்ச்சியும் இல்லாத நிலை உள்ளது. எனவே, முதலீடு செய்யும் போது கையில் உள்ளவற்றை வைத்து தொழில் செய்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
 

எட்டாம் வீட்டில் சனி பகவான்! கண்டிப்பா இது நடந்தே தீரும்..! | Tamil New Year Rasi Palan 2023 KadagamRepresentative Image

அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். வேலை மாற்றத்திற்கு இந்த காலம் உகந்தது அல்ல. அக்டோபர் மாதத்திற்குப் பின், வேலைமாற்றம் செய்வது சிறப்பைத் தரும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், தந்தையுடன் பிரச்சனை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்வது நல்லது. இந்த புத்தாண்டு எல்லாவற்றிலும் நன்மையைத் தரக்கூடியதாக உள்ளது. ஆனால், பெரிய அளவில் முதலீடு, பெரிய அளவில் வருமானம் எதிர்பார்ப்பு, ஆடம்பரம் உள்ளிட்டவை கடன் சுமையை அள்ளித் தரும். 

பரிகாரம்: பைரவ வழிபாடு சாலச் சிறந்தது. முன்னோர்களின் வழிபாடு அதிலும் குறிப்பாக, அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்