Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,892.05
-250.75sensex(-0.34%)
நிஃப்டி22,142.65
-70.05sensex(-0.32%)
USD
81.57
Exclusive

நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 Dhansu

Nandhinipriya Ganeshan Updated:
நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 DhansuRepresentative Image.

அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 DhansuRepresentative Image

தனுசு தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023:

தனுசு ராசியினரே! இந்த சோபகிருது வருடம் உங்களுக்கு பல ஏற்றங்களையும், மேன்மைகளையும் கொடுக்கப் போகிறது. தொழில் இருந்த நஷ்டங்கள், இழுபறிகள், நெருக்கடிகள் அனைத்தும் விலகி முழுமையான ஏற்றம் ஏற்படப்போகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் தனுசு ராசியினருக்கு திருமண யோகம் கைக்கூடி வரும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல், அன்னோநியம் அதிகரிக்கும். பிரிந்த இருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 DhansuRepresentative Image

காதலர்களுக்கும் அற்புதமான ஆண்டாக இருக்க போகிறது. அதாவது, இவ்வளவு நாட்களாக ரகசியமாக காதலித்து வந்த தனுசு ராசியினர் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை கரம் பிடிப்பார்கள். அதுவும் பெற்றோர்களின் சம்மதத்துடன். குழந்தை வரம் வேண்டி ஏங்குவோருக்கு நிச்சயம் இந்த ஆண்டு குழந்தை வரம் கிட்டும். செயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியினர் சித்திரை - ஆடி மாத இடைவெளியில் முயற்சி செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. 

நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 DhansuRepresentative Image

நீண்ட நாட்களாக பிடித்த வேலைக்காக காத்துக்கொண்டு இருப்பவர்கள் மனதிற்கு முடித்த வேலை கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உதவி உண்டு. குழந்தைகளுக்கு இருந்துவந்த உடல் சார்ந்த பிரச்சனைகள், மனம்சார்ந்த தொந்தரவுகள் அனைத்தும் விலகி, நல்ல மேன்மை உண்டாகும். என்ன தான் சம்பாதித்தாலும் கையில் பணம் என்பதே இருந்திருக்காது, அதாவது வரவும் செலவும் சரியாக இருந்திருக்கும். ஆனால், இந்த வருடத்தில் நீங்க எதிர்பார்த்தைவிட பொருளாதார வளர்ச்சி உண்டு. 

நல்ல காலம் பொறக்கப்போகுது.. கவலைய விட்டுத்தல்லுங்க தனுசு ராசியினரே.. | Tamil New Year Rasi Palan 2023 DhansuRepresentative Image

வங்கியில் சேமிப்பு உயரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு குடிப்பெயர வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். கடன் சொந்தரவுகளால் படாதுபட்டு வந்த தனுசு ராசியினருக்கு இனி கடன் பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகிறது. எல்லாம் நன்றாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதாவது, புதிய தொழில் தொடங்குவதாக இருந்தால் ஆலோசித்து முடிவு எடுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்